பிசிசிஐ போட்ட மெகா நாடகம்.. நம்பி ஏமாந்த அணிகள்.. உண்மையான அதிர்ச்சியே இனி தான் காத்திருக்கு தம்பி
மும்பை : ஐசிசி உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆடுகளம் அனைத்தும் ரன்குவிப்புக்கு சாதகமாக செயல்படுகிறது.குறிப்பாக பாகிஸ்தான் அணி 345 ரன்கள் அடித்தும் அதனை 43.4 வது ஓவரிலே நியூசிலாந்து அணி எட்டியது.
இதேபோன்று மீண்டும் நியூசிலாந்து அணி 321 ரன்கள் குவித்து இருக்கிறது. இதனால் இந்த உலகக் கோப்பையில் 400 ரன்களுக்கு மேல் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிசிசிஐ போட்டுள்ள நாடகம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பயிற்சி ஆட்டம் என்றால் ஆடுகளங்கள் எவ்வாறு இருக்கும் அதற்கு ஏற்றார் போல் நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் போட்டியாகும். ஆனால் இதில் தான் தற்போது பிசிசிஐ தனது வேலையை காட்டி இருக்கிறது. அதாவது பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை கொடுத்துவிட்டு உலகக்கோப்பை தொடங்கும்போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெளிநாட்டு அணி 200 ரன்களை தாண்டுவது கடினமாக இருக்கும் வகையில் ஆடுகளத்தை பிசிசிஐ தயார் செய்ய இருக்கிறது. மேலும் பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான போட்டி இருக்க வேண்டும் என்பதற்காக ஆடுகளங்களில் பல மாற்றங்களை பிசிசிஐ செய்திருக்கிறது. தற்போது பயிற்சி ஆட்டம் நடைபெற்ற மைதானங்களில் ஹைதராபாத் தவிர மற்ற இரண்டு மைதானங்களில் போட்டியே நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹைதராபாத்தில் இந்தியா போட்டிகள் எதுவும் இல்லை. இதனால் ஹைதராபாத்தில் மட்டும் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அங்கு கடுமையாக தடுமாறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
பயிற்சி ஆட்டத்தில் விளையாடிவிட்டு ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளங்களில் தான் நாம் விளையாட போகிறோம் என அனைத்து அணிகளும் அதற்கு ஏற்ற வகையில் தயாராகும் நிலையில் போட்டி தொடங்கியவுடன் சுழற்பந்து வீச்சு ஆடுகளங்களை கொடுத்து அதிர்ச்சியை தர பிசிசிஐ தயாராகி விட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications