Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு புதிய ஜெர்சி.. தோனி காலத்து ஸ்டைலில் ரெடி.. இணையத்தை கலக்கும் புகைப்படம்

மும்பை: 2022 டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி புதிய ஜெர்சியை அணிய உள்ளது.

ஒவ்வொரு ஐசிசி கிரிக்கெட் தொடருக்கும் இந்திய கிரிக்கெட் அணி புது ஜெர்சியை அணிவது வழக்கம்.

ஜெர்சியின் நிறம் ஒரே மாதிரியாக இருந்தாலும் சில சில டிசைன் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

புதிய ஜெர்சி

புதிய ஜெர்சி

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்காக புத்தம் புதிய ஜெர்சியை பயன்படுத்த பிசிசியை திட்டமிட்டுள்ளது. அதன்படி டி20 உலக கோப்பையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் லைட் ப்ளூ கலரை இந்திய அணி பயன்படுத்தியது. தற்போதைய உலகக் கோப்பை தொடருக்கு அதனை நினைவு கூறும் விதமாக வான நீல நிறத்தில் ஜெர்சியை மாற்ற பிசிசிஐ யை முடிவெடுத்துள்ளது.

புதிய டிசைன்

புதிய டிசைன்

இந்திய அணிக்கு சஹாரா ஸ்பான்சராக இருந்த காலத்தை நாம் யாரும் மறக்க முடியாது .அந்த வகையில் தற்போது பல ஸ்பான்சர்கள் இந்திய அணிக்கு மாறியிருக்கின்றனர். தற்போது எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் மற்றும் பை ஜூஸ் என்ற நிறுவனம் இந்திய அணியின் ஜெர்ஸிக்கு ஸ்பான்சர் செய்கிறது. 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட ஜெர்சி டிசைன் போல் இது இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வீடியோ

புதிய வீடியோ

கையில் மற்றும் கழுத்தில் இந்திய கொடியின் டிசைன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஜெர்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது .அதில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற ஜெர்சிக்கு மேல் ஜெர்க்கின் களை அணிந்து ரசிகர்கள் முன் தோன்றுகின்றன .இதனால் புது ஜெர்சி எப்படி இருக்கும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்களில் ஒரு சிலர் 2007 ஆம் ஆண்டு பயன்படுத்த ஜெர்சி தான் சிறப்பாக இருந்ததாகவும் இன்னொரு சிலர் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற ஜெர்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியில் நல்ல மாற்றங்களை கொண்டு வராமல் வெறும் ஜெர்சியை மற்றும் மாற்றினால் எப்படி கோப்பையை வெல்ல முடியும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் உங்களுக்கு இந்தியனின் எந்த ஜெர்சி பிடிக்கும் என்று கமெண்ட் செய்யுங்கள்.

Story first published: Tuesday, September 13, 2022, 16:10 [IST]
Other articles published on Sep 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+