Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வாரியத்தை தமிழ்நாடு 'ஹைஜாக்' பண்ணிருச்சாம்... பிஷன் சிங் பேடியின் 'கேடி'ப் பேச்சு!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வாரியத்தை தமிழ்நாடு ஹைஜாக் செய்து விட்டதாக "லூசு" போலவே பேசியுள்ளார் பிஷன் சிங் பேடி.

என்.சீனிவாசனை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பெயரையும் பயன்படுத்தி வாய்க்கொழுப்பாக பேசியுள்ளார் பேடி.

கொல்கத்தாவில் பேசியபோதுதான் இப்படிப் பேசி வைத்தார் பேடி. அந்தப் பேச்சிலிருந்து...

டெல்லியில் பிறந்துச்சாம்

டெல்லியில் பிறந்துச்சாம்

இது ரொம்ப வினோதமானது. டெல்லியில்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் பிறந்தது. டெல்லியில் உள்ள ரோஷனரா கிளப்பில்தான் வாரியம் பிறந்தது.

கொல்கத்தாவில் வளர்ந்துச்சாம்

கொல்கத்தாவில் வளர்ந்துச்சாம்

ஆனால் கொல்கத்தாவில்தான் இது தழைத்து வளர்ந்தது. அதில் ஈடன் கார்டன் மைதானத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

தமிழ்நாடு கடத்திருச்சாம்

தமிழ்நாடு கடத்திருச்சாம்

ஆனால் இப்போது வாரியத்தை தமிழ்நாடு கடத்திக் கொண்டு போய் விட்டது. இதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது.

இதுதாங்க சரியான இடம்

இதுதாங்க சரியான இடம்

என்னைப் பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் வாரியம் சிறந்து விளங்கியது இந்த கொல்கத்தாவில்தான். இந்த ஈடன் கார்டன் மைதானத்தில்தான். உலகின் அற்புதமான மைதானம் ஈடன்கார்டன்தான். அந்த மைதானத்திற்கு நான் வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார் பேடி.

சென்னைக்கு வந்தா என்ன தப்பு பேடி!

சென்னைக்கு வந்தா என்ன தப்பு பேடி!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இதற்கு முன்பு இருந்தவர்கள் எல்லாம் அவரவர் சொந்த ஊரில் இருந்துதான் நாட்டாமை செய்து வந்தனர். ஜக்மோகன் டால்மியா கொல்கத்தாக்காரர் என்பதால் கொல்கத்தாவில் வாரியத்தை குடி வைத்தார். சரத்பவார் இருந்தபோது மும்பைக்கு ஜாகையை மாற்றினார். அப்போதெல்லாம் வாயே திறக்காமல் பபுள் கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இந்த பேடி. ஆனால் சீனிவாசன் சென்னையிலிருந்து இயங்கியது இவருக்கு கஷ்டமாக தெரிகிறது போல.

சீனியை மட்டும் திட்ட வேண்டியதுதானே

சீனியை மட்டும் திட்ட வேண்டியதுதானே

சீனிவாசனை பேடிக்குப் பிடிக்காது. அப்படியானால் சீனியை மட்டும்தானே அவர் விமர்சிக்க வேண்டும். ஏன் தேவையில்லாமல் தமிழ்நாடு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார் என்று புரியவில்லை... பேடி பேச்சு கேடித்தனமா இருக்கே!

Story first published: Thursday, November 13, 2014, 12:45 [IST]
Other articles published on Nov 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+