
வங்கதேசத்தை சாதாரணமாக நினைத்தது தவறு
நமது வீரர்கள் வங்கதேச அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஒரு நாள் போட்டிக்கு முன்னதாக அவர்கள் சரிவர ஆயத்தமாகவில்லை. போட்டிக்கான பதட்டமே அவர்களிடம் இல்லை. தயார் நிலையிலும் இல்லை.

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்
பரவாயில்லை, அது முடிந்த கதை. இப்போது இளம் வீரர்கள் கொண்ட அணியை ஜிம்பாப்வேக்கு அனுப்புகிறார்கள். இது பாராட்டுக்குரியது. இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஹானே நல்லவர் வல்லவர்
ரஹானே கேப்டனாகியுள்ளார். அவர் இளைஞர், திறமையானவர், அமைதியானவர். சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்துகிறேன். ஜிம்பாப்வே டூர் அவருக்கு நல்லபடியாக அமையும் என நம்புகிறேன்.

ஏன் நீக்கினார் டோணி
வங்கதேச டூரில் கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் ரஹானே நீக்கப்பட்டார். என்ன காரணத்திற்காக அவர் நீக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. புதிய முயற்சிக்காக ரஹானேவை நீக்கியிருக்கலாம். அவர் நல்ல வீரர். நீண்ட காலத்திற்கு இந்தியாவுக்காக ஆடுவார்.

"பஜ்ஜி" நல்ல தேர்வுதான்
ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதைப் பார்த்து அவரை அணிக்குத் தேர்வு செய்துள்ளனர். இது நல்லதுதான். ஐபிஎல் அடிப்படையில் ஒரு நாள் போட்டிக்கு வந்துள்ளார் ஹர்பஜன் சிங். அவர் அணியில் இருப்பது இளைஞர்களுக்கு உத்வேகம் தரும். அஸ்வின் அணிக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஹர்பஜனும் நீடிக்க வேண்டும்.

2 கேப்டன்கள் நல்லதா, கெட்டதா
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது. டோணி பதவி விலகியதால் வேறு வழியில்லாமல் இன்னொரு கேப்டனாக கோஹ்லி வந்துள்ளார். பிசிசிஐக்கு வேறு வழி தெரியவில்லை. டோணி இருந்திருந்தால் கோஹ்லி வந்திருக்க மாட்டார். இந்தியாவுக்கு 2 கேப்டன்கள் தேவை இல்லை.

டோணி மறுபரிசீலனை செய்திருக்கலாம்
டெஸ்ட் போட்டிகளிலிரு்து விலகும் முடிவை டோணி மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும். இன்னும் சில காலம் அவர் விளையாடியிருக்கலாம். அவர் போனதால்தான் கோஹ்லியைக் கேப்டனாக்கியுள்ளனர் என்றார் வடேகர்.


Click it and Unblock the Notifications











