Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ப்ளேயிங் 11 அறிவிப்பு.. பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.. இதை கவனித்தீர்களா?

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 நேற்றைய தினமே மறைமுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Asia Cup 2022: Pakistan-ல் Mohammad Wasim விலகல்! Hasan Ali வந்துட்டார்

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இரவு துபாயில் நடைபெறுகிறது.

 இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து இந்த முறை பதிலடி கொடுப்பதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பாகிஸ்தானை எதிர்கொள்ள எந்த மாதிரியான ப்ளேயிங் 11-ஐ இந்தியா அறிவிக்கவுள்ளது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்திய அணி தனது ப்ளேயிங் 11-ஐ மறைமுகமாக வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. மொத்தமாக 11 புகைப்படங்கள் மட்டுமே இருந்த அந்த பதிவில் வீரர்கள் வரிசையாக இருந்தனர்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

அதன்படி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் ஓப்பனிங் ஜோடியாக களமிறங்குகின்றனர். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி மற்றும் 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா மட்டும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவருமே ஒதுக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் மட்டுமே களமிறக்கப்படுகிறார். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமாருடன் சேர்த்து இரண்டு இளம் வீரர்கள் ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுவேந்திர சாஹல்

Story first published: Saturday, August 27, 2022, 12:49 [IST]
Other articles published on Aug 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+