Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்களை நம்ப வேண்டாம்..!! ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ வெளியிட்ட எச்சரிக்கை

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் தொடங்க இன்னும் 36 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், அணி நிர்வாகிகளுக்கு பி.சி.சி.ஐ. சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

ஏலத்தில் யாரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது குறித்து அணி நிர்வாகிகள் இறுதிக் கட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், பி.சி.சி.ஐ. தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு, அணி நிர்வாகிகளுக்கு சிக்கலை தந்துள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் இறுதியில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி , மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிய மார்ச் இறுதியாகிவிடும்.

பிசிசிஐ அறிவுறுத்தல்

பிசிசிஐ அறிவுறுத்தல்

இதன் பின்னர், இரு நாட்டு அணி வீரர்களும் இந்தியாவுக்கு வந்து தனிமையில் இருக்க வேண்டும். இதனால் இங்கிலாந்து,. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

பிளே ஆப் சுற்று

பிளே ஆப் சுற்று

இதே போன்று பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மார்ச் மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர். இதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரும் ஐ.பி.எல். போட்டிகளை தொடக்கத்தில் விளையாட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது. மேலும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றனர்.

நெருக்கடி

நெருக்கடி

இதனால் ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றில் இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நேரத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளதால் , அணி நிர்வாகிகள் அதற்கு ஏற்றார் போல் வீரர்களை தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Story first published: Thursday, February 10, 2022, 23:18 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+