Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி அப்படியே டீமில் இடம்பிடிக்க முடியாது.. இந்திய வீரர்களுக்கு செக்.. பிசிசிஐ கெடுபிடி!

மும்பை : இந்திய அணி வீரர்கள் இனி அணியில் இடம் பிடிக்கும் முன் கடுமையான உடற்தகுதி தேர்வை செய்ய வேண்டுமென பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.

இதற்கு என்ன காரணம் எனவும் பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே யோ யோ உடற்தகுதி தேர்வு இருக்கும் நிலையில் இனி புதிய தேர்வு ஒன்றிலும் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும்.

2 கிலோமீட்டர்

2 கிலோமீட்டர்

பிசிசிஐ கொண்டு வந்துள்ள புதிய தேர்வின் படி, அணியில் இடம் பெறும் முன் இந்திய வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடம் 30 வினாடிகளில் கடக்க வேண்டும். இது சில விளையாட்டுக்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உடற்தகுதி தேர்வு தான்.

இடைவிடாத போட்டிகள்

இடைவிடாத போட்டிகள்

யோ யோ தேர்வுடன் இனி இந்த தேர்வையும் வீரர்கள் மேற்கொள்ள வேண்டும். சமீப காலமாக கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தொடர்களை எல்லாம் சேர்த்து வைத்து இந்திய அணி ஆடி வருவதால் உடற்தகுதி அவசியம் ஆகிறது.

காயம்

காயம்

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் பல இந்திய வீரர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்கினர். அதுவும் வீரர்கள் உடற்தகுதி மீதான கேள்வியை எழுப்பி இருந்தது. இந்த நிலையில், பிசிசிஐ அதிரடி முடிவை எடுத்துள்ளது.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

இனி இந்திய வீரர்கள் ஆண்டில் மூன்று முறை நடைபெறும் இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு தங்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இதில் வேகப் பந்துவீச்சாளர்கள் 2 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடங்கள் 15 வினாடிகளில் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 22, 2021, 16:23 [IST]
Other articles published on Jan 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+