Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசு 60, 2 வருஷம் சர்வதேச அனுபவம்...! உங்ககிட்ட இருக்கா? அப்போ... நீங்க தான் இந்திய அணியின் கோச்

மும்பை: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சர்வதேச அனுபவம் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய சூழ்நிலையில், அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்ததை அடுத்து 2017ம் ஆண்டில் ரவிசாஸ்திரி இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 57 வயதான இவர் ஆகஸ்ட் 2014 முதல் ஜூன் 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராகவும் இருந்தார்.

சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா ஒரு பெரியது ஒரு ஐசிசி போட்டி எதையும் வெல்லவில்லை. இந்தாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி புதியதொரு வரலாறு படைத்தது.

நீட்டிக்கப்பட்ட பதவி

நீட்டிக்கப்பட்ட பதவி

இந் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ அமைப்பு விண்ணப்பம் கோரியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சி யாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3

செப்டம்பர் 3

இந்திய அணி இம்மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொள்கிறது. தொடர் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடை பெறுகிறது. அந்த தொடர் வரை ரவி சாஸ்திரியும் அவரது உதவியாளர்களும் பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்கள்.

பிசிசிஐ விண்ணப்பம்

இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் ஆகியோரை நியமனம் செய்ய வேண்டி அதற்கான விண்ணப்பங்களை கோரியிருக்கிறது பிசிசிஐ. இது தவிர பிசியோ தெரபிஸ்ட், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் மற்றும் நிர்வாக மேலாளர் ஆகிய பணியாளர்களை நியமிக்கவும் விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியுள்ளது.

ஜூலை 30

ஜூலை 30

அனைத்து இடங்களுக்கான விண்ணப்ப காலக்கெடு வரும் 30ம் தேதி மாலை 5 மணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி சாஸ்திரி, 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தகுதிகள் என்ன?

தகுதிகள் என்ன?

கடந்த முறை பயிற்சியாளருக்கான தகுதிகளாக 9 விஷயங்களை பிசிசிஐ சுட்டிக் காட்டியிருந்தது. அவை அனைத்தும் கவனம் பெறாதவையாகவும், தெளிவு இல்லாமலும் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த முறை பயிற்சியாளர் பதவிகளுக்கு 3 தகுதிகளை மட்டுமே நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 17, 2019, 13:48 [IST]
Other articles published on Jul 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+