For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL க்கு போட்டியாக வருகிறது புதிய தொடர்.. பிசிசிஐ சிறப்பு ஏற்பாடு.. 120 நிமிடத்தில் முடிந்துவிடும்

மும்பை : கிரிக்கெட்டின் அடித்தளத்தையே மாற்றிய போட்டி என்றால் அது ஐபிஎல் தான். ஐ பி எல் தொடர் வந்த பிறகு தான் கிரிக்கெட் நோக்கி பல இளைஞர்கள் வரத் தொடங்கினர்.

இன்னும் சொல்லப்போனால் பல வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினால் வாழ்க்கையில் தன்னிறைவு பெற்று விடலாம் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள்.

BCCI is all set to launch T10 League in the name of mini IPL

இதனால்தான் ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் பல வீரர்கள் தங்களது பெயரை கொடுத்து வருகிறார்கள். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் மார்ச் முதல் மே இறுதிவரை நடைபெறுகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்காக பிசிசிஐ அந்த மாதத்தில் எந்த ஒரு சர்வதேச போட்டியும் நடத்தாமல் வைத்திருந்தது.

ஆனால் சாம்பியன் லீக் தொடர் ரத்தான பிறகு அந்த இடத்தில் மினி ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்திருந்தது. அதன்படி அந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணியை வைத்து மட்டும் நடத்தலாம் என்றும் முடிவு எடுத்து இருந்தது. இந்த நிலையில் மாற்றம் ஒன்றுதான் மாறாத ஒன்று என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது டி20 போட்டியின் புதிய வடிவமாக டி 10 தொடரை மினி ஐபிஎல் என்ற பெயரில் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

இதற்கான அனுமதியை ஐசிசி இடம் பிசிசிஐ ஏற்கனவே பெற்றுவிட்டது. இதன் மூலம் இதே ஐபிஎல் அணிகளை வைத்து டி10 ஓவர் கொண்ட போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அபுதாபி, அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் டி டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதனால் இந்தியாவும் டி10 தொடரை ஐபிஎல் அணிகளை வைத்து நடத்தலாம் என முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் கூடுதல் லாபத்தை ஈட்ட முடியும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டமிட்டுள்ளார். இதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு இல்லை 2025 ஆண்டு முதல் மினி ஐபிஎல் என்ற பெயரில் t20 போட்டியை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் டி10 தொடர் 120 நிமிடத்திற்குள்ளே நடத்தி முடித்து விடலாம். மேலும் இதன் மூலம் நிறைய வீரர்களுக்கு வாய்ப்புகளும் பிசிசிஐக்கு லாபமும் நிச்சயம் கிடைக்கும். ஆனால் டி10 தொடர் வந்தால் அது கிரிக்கெட்டின் சுவாரசியத்தை குறைத்து விடும் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Friday, December 15, 2023, 15:56 [IST]
Other articles published on Dec 15, 2023
English summary
BCCI is all set ti launch T10 League in the name of mini IPL IPL க்கு போட்டியாக வருகிறது புதிய தொடர்.. பிசிசிஐ சிறப்பு ஏற்பாடு.. 120 நிமிடத்தில் முடிந்துவிடும்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+