For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறிய தொடருக்கு இப்படி ஒரு அணியா?... பிசிசிஐ போட்டுள்ள மெகா ப்ளான்..இளம் வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்

மும்பை: இலங்கை தொடருக்காக மெகா இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இலங்கை சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.

2 இந்திய அணிகள்

2 இந்திய அணிகள்

இந்திய அணி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14 தேதி வரை நடக்கிறது. இது ஒரு புறம் இருக்க, 2வதாக ஒரு இந்திய அணி உருவாக்கப்பட்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் அனுப்பப்படவுள்ளது.

அட்டவணை வெளியீடு

அட்டவணை வெளியீடு

இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணையை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெகா ப்ளான்

மெகா ப்ளான்

இந்த சுற்றுப்பயணத்திற்காக சாதரண அணியை உருவாக்காமல் 24 பேர் கொண்ட மெகா அணியாக உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறாத வீரர்கள், டி20 தொடரில் வாய்ப்பு பெறுவார்கள். வீரர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 24 வீரர்களின் செயல்பாடுகளை வைத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணியை ஷிகர் தவான் தலைமை தாங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருப்பதால், இலங்கை தொடருக்கான அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

Story first published: Tuesday, June 8, 2021, 17:14 [IST]
Other articles published on Jun 8, 2021
English summary
BCCI is expected to pick 24 players for Sri Lanka limited over series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+