For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ்நாடு கேன்சல்... அகமதாபாத்துல செயல்படுத்த திட்டமிடும் பிசிசிஐ!

டெல்லி :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டிகள், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

5ம் தேதி துவக்கம்

5ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி 5ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கென இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

தமிழக அரசு மறுப்பு

தமிழக அரசு மறுப்பு

முன்னதாக இந்த தொடரில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுத்து தமிழக சுகாதாரத்துறை மற்றம் கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களை அனுமதிக்க ஆலோசனை

பார்வையாளர்களை அனுமதிக்க ஆலோசனை

இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதி 2 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கென அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 25,000 முதல் 30,000 வரையிலான பார்வையாளர்களை அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

பிசிசிஐ ஆலோசனை

பிசிசிஐ ஆலோசனை

இதற்கென சம்பந்தப்பட்ட இரண்டு கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த ஆஸ்திரேலியா தொடரில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பிசிசிஐ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Story first published: Thursday, January 28, 2021, 13:17 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
The board has been in talks with the two concerned association
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+