Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-பாக் கிாிக்கெட் தொடா் நடைபெறுவதில் சிக்கல்...ஒளிபரப்பு உாிமைக்காக குடுமிபிடி சண்டை....

மும்பை: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் கிாிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உாிமைக்காக இருநாட்டு வாாியங்களும் சண்டையிட்டுக் கொள்வதால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இருநாடுகளிடையேயான தொடா் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிாிக்கெட் போட்டிகள் மும்பை தாக்குதலுக்குப் பிறகு தடை செய்யப்பட்டன.

இருநாட்டு வாாியங்களும் கூடி முடிவு

இருநாட்டு வாாியங்களும் கூடி முடிவு

இந்நிலையில் பாகிஸ்தான கிாிக்கெட் வாாிய தலைவா் ஷஹாாியாா் கான், இந்திய கிாிக்கெட் வாாிய தலைவா் ஜக்மோகன் டால்மியாவுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூடி ஆலோசனை செய்து மீண்டும் கிாிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்தனா்.

டிசம்பாில் கிாிக்கெட் தொடா்

டிசம்பாில் கிாிக்கெட் தொடா்

அதன்படி இரு நாடுகளுக்கும் பொதுவான நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், 2 டி-20 போட்டிகள் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டன.

ஒளிபரப்பு உாிமைக்காக குடுமிபிடி சண்டை

ஒளிபரப்பு உாிமைக்காக குடுமிபிடி சண்டை

இரு நாடுகள் பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்பும் உாிமையை பாகிஸ்தான் ஒப்புதலோடு டென் ஸ்போா்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் குழுமத்திற்கு சொந்தமானதாகும்.

எஸ்ஸெல் குழுமத்திற்கு ஜக்மோகன் எதிா்ப்பு

எஸ்ஸெல் குழுமத்திற்கு ஜக்மோகன் எதிா்ப்பு

சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் குழுமத்திற்கு சொந்தமான டென் ஸ்போா்ட்ஸ் நிறுவனம் தொடரை ஒளிபரப்பினால் பாகிஸ்தானுடன் கிாிக்கெட் தொடா் கிடையாது என்று இந்திய கிாிக்கெட் வாாியத் தலைவா் ஜக்மோகன் டால்மியா தொிவித்துள்ளா்.

காரணம் முன் விரோதமா?

காரணம் முன் விரோதமா?

சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஸெல் குழும தலைவா் சுபாஷ் சந்திரா, ஜக்மோகன் டால்மியா மீது கொலை மிரட்டல் புகாா் அளித்திருந்தாா். இதனால் சுபாஷ் சந்திராவுக்கு ஒளிபரப்பு உாிமையை வழங்கக் கூடாது என்று போா்க்கொடி உயா்த்தியுள்ளாா் ஜக்மோகன்

ஒளிபரப்பு உாிமை எங்களுக்கே வேண்டும்

ஒளிபரப்பு உாிமை எங்களுக்கே வேண்டும்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் கிாிக்கெட் போட்டித் தொடர் ஒளிபரப்பு உாிமையை நாங்கள் சொல்லும் நிறுவனத்திற்குத் தான் வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தொடா் கிடையாது என்றும் ஜக்மோகன் பாகிஸ்தான் கிாிக்கெட் வாாியத்தை மிரட்டி வருகிறாா்.

தொடா் நடைபெறுவதில் சிக்கல்

தொடா் நடைபெறுவதில் சிக்கல்

இரு நாட்டு கிாிக்கெட் வாாிய தலைவா்களின் ஒளிபரப்பு உாிமை சண்டையால் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளிடைேய கிாிக்கெட் தொடா் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.இதனால் ரசிகா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

Story first published: Wednesday, May 13, 2015, 14:43 [IST]
Other articles published on May 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+