Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஸ்திரி, கோஹ்லி கேட்டதெல்லாம் செஞ்சோமே... தொடர் தோல்விகளால் கோபத்தில் பிசிசிஐ

Recommended Video

இந்தியாவின் தொடர் தோல்விகளால் கோபத்தில் பிசிசிஐ- வீடியோ

மும்பை: இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இழந்து 0-2 என ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தடுமாறி வருகிறது. இரண்டாவது போட்டியில் மிகவும் மோசமாக இங்கிலாந்து பந்துவீச்சில் சரணாகதி அடைந்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.

மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழக்க நேரிடும். ஒருவேளை, அப்படி நடந்தால் பிசிசிஐ, கேப்டன் விராட் கோஹ்லி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பிற உதவி பயிற்சியாளர்களையும் விளக்கம் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ஒரு பிசிசிஐ அதிகாரி, “இந்திய அணி தயாராக நேரம் கிடைக்கவில்லை என்ற சாக்கை சொல்லமுடியாது. தென்னாபிரிக்காவில் தோற்ற போது, வீரர்கள் நெருக்கமான போட்டிகள் மற்றும் பயிற்சிப் போட்டிகள் அற்ற நிலை ஆகியவை குறித்து கூறினார்கள். அவர்களுடன் பேசிய பின்பு தான், டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டன. இந்திய “ஏ” அணியும் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டு மூத்த இந்திய வீரர்கள் (முரளி விஜய், ரஹானே) அதில் பங்கேற்றார்கள்” என்றார்.

மற்றொரு தகவலையும் வெளியிட்டுள்ளார் இந்த அதிகாரி. 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்த போது, அணியின் பயிற்சியாளர் டங்கன் ப்ளெட்சர் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். அப்போதுதான், ரவி சாஸ்திரி அணியின் இயக்குனராகவும், அவரோடு சஞ்சய் பங்கர், பாரத் அருண், ஸ்ரீதர் ஆகிய உதவி பயிற்சியாளர்களும் அணியில் சேர்ந்தனர்.

ஆனால், இதே ரவி சாஸ்திரி மற்றும் அவரது உதவியாளர்கள் இருந்த போது தான் 2014-15 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மற்றும் 2017-18 தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இழந்துள்ளோம் என கூறியுள்ளார் அந்த அதிகாரி.

அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் பொறுப்பேற்ற பின் இதுவரை ஸ்லிப்பில் 50 கேட்ச்கள் தவற விடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஸ்ரீதர், பாரத் அருண், சஞ்சய் பங்கர், என அனைவரும் ரவி சாஸ்திரி மற்றும் கோஹ்லியின் தேர்வுதான் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து சுற்றுபயணத்தில் மேலும் உள்ள போட்டிகளில் வென்று காட்டவில்லை என்றால், ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோஹ்லியின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.

Story first published: Tuesday, August 14, 2018, 9:03 [IST]
Other articles published on Aug 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+