Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து -இந்திய தொடர்... நிறைய இடத்துல நடக்குதாம்... பிசிசிஐ அதிரடி வியூகம்

டெல்லி : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் வரும் பிப்ரவரி மாதத்தில் 3 வடிவங்களிலும் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோதவுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரை இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அகமதாபாத்தின் மோதரா மைதானத்திலும் ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தின் அடுத்தடுத்த தொடர்

இங்கிலாந்தின் அடுத்தடுத்த தொடர்

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் வரும் பிப்ரவரி மாதத்தில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர்களில் விளையாடிவரும் இங்கிலாந்து அடுத்ததாக இலங்கையில் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் வரும் ஜனவரியில் விளையாடவுள்ளது.

பல்வேறு இடங்களில் நடத்த திட்டம்

பல்வேறு இடங்களில் நடத்த திட்டம்

அடுத்ததாக இந்தியாவில் வரும் பிப்ரவரியில் இங்கிலாந்து அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த தொடர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. முக்கியமாக அகமதாபாத்தின் மோதரா மைதானத்திலும் ஒரு போட்டி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்டில் சுற்றுப்பயணம்

ஆகஸ்ட்டில் சுற்றுப்பயணம்

அடுத்த ஆண்டில் இந்தியாவும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி இந்த டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட் தெரிவித்துள்ளது. டிரெண்ட் பிரிட்ஜில் முதல் போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.

ரசிகர்களை அனுமதிக்க திட்டம்

ரசிகர்களை அனுமதிக்க திட்டம்

அடுத்தடுத்த போட்டிகள் லார்ட்ஸ், ஹெட்டிங்லே, கியா ஓவல் மற்றும் ஓல்ட் ட்ரபோர்ட் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு ரசிகர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, December 8, 2020, 13:05 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+