Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்.. ஆஸ்திரேலியா தொடருக்காக திடீர் முடிவு.. என்ன ஆனது?

மும்பை: ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் சூழலில் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடும்ப நிகழ்ச்சிகளில் இருந்த பாண்ட்யா பெட்டியை கட்டியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு முன்னிலையில் உள்ளது.

மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் வெற்றி கண்டு ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணியும், எப்படியாவது ஒரு வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியும் முணைப்புடன் உள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

இந்நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட பல வீரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கான அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரோகித் சர்மாவுக்கு முதல் போட்டியில் மட்டும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், அதில் மட்டும் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார்.

பிசிசிஐ நோட்டீஸ்

பிசிசிஐ நோட்டீஸ்

எனவே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வான வீரர்கள் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராக சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அங்கு வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணி முகாமில் இணைவார்கள். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இதே கண்டிஷன் தான்.

திருமண நிகழ்ச்சி

திருமண நிகழ்ச்சி

ஹர்திக் பாண்ட்யாவுக்கு தற்போது தான் பிரமாண்டமாக திருமணம் முடிந்தது. இதே போல ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடாமல் இருந்து வருகின்றனர். எனவே தான் அவர்களை முன்கூட்டியே என்.சி.ஏவுக்கு வரவழைத்துள்ளனர். யுவேந்திர சாஹல் மற்றும் உமான் மாலிக் ஆகியோர் ஏற்கனவே பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே படை

அதே படை

டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு 3வது போட்டிக்காக 10 நாட்களுக்கும் மேலாக ஓய்வு தரப்பட்டிருக்கிறது. எனவே அவர் தேவையான பயிற்சி மற்றும் ஓய்வை எடுத்துவிட்டு நேரடியாக வந்துவிடுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, February 23, 2023, 11:23 [IST]
Other articles published on Feb 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+