Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கே.எல்.ராகுல் ஒன்னும் விதிவிலக்கு இல்லை”.. முதல் டெஸ்டில் சொதப்பல்.. பிசிசிஐ கடும் எச்சரிக்கை!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பல்வேறு சலுகைகள் கிடைத்தும் கே.எல்.ராகுல் சொதப்பியதால் பிசிசிஐ தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தபோட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 177 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மிகக்குறைந்த ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

 ஆஸ்திரேலிய டெஸ்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட்

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தையே கொடுத்தார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறிய அவருக்கு இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் பணி கூட கொடுக்காமல் முழு நேர பேட்ஸ்மேனாக சேர்த்தன. அதுவும் சுப்மன் கில் போன்ற அட்டகாச ஃபார்மில் இருக்கும் வீரரை வெளியே உட்காரவைத்துவிட்டு, ராகுலை நம்பி களமிறக்கினர்.

தொடர் சொதப்பல்கள்

தொடர் சொதப்பல்கள்

இந்த போட்டியில் நிதானமாக ஆடிய அவர் 71 போட்டிகளில் ஒரே ஒரு பவுண்டரியுடன் 20 ரன்களை மட்டுமே அடித்து அவுட்டானார். கே.எல்.ராகுல் கடைசியாக சதமடித்ததில் இருந்து தற்போது வரை 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20 என மிகவும் மோசமான ஸ்கோர்களையே அடித்திருக்கிறார். இதனால் அவருக்கு இனியும் வாய்ப்பு தர வேண்டுமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, துணைக்கேப்டன் என்ற பதவிக்காக தான் அவர் சேர்க்கப்படுகிறார் என்ற விமர்சனங்களும் இருந்து வருகின்றன.

பிசிசிஐ வார்னிங்

பிசிசிஐ வார்னிங்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் தந்துள்ளார். துணைக்கேப்டன் என்பதற்காக பாரபட்சம் பார்ப்பதாக யார் சொன்னார்கள்? துணைக்கேப்டன் வெளியேற்றப்படக்கூடாது என எந்தவொரு விதியும் கிடையாது. கே.எல்.ராகுல் நிச்சயமாக இந்தியாவின் கேப்டன்சி நபர் தான். ஆனால் ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு மட்டும் தான் இங்கு வாய்ப்பு. இதில் இருந்து யாருக்கும் விதிவிலக்கல்ல.

கம்பேக் கொடுப்பார்

கம்பேக் கொடுப்பார்

கே.எல்.ராகுல் 3 வடிவ கிரிக்கெட்டிலும் நல்ல ஃபார்மில் இல்லை என்பது உண்மை தான். குறிப்பாக டெஸ்ட் மற்றும் டி2 கிரிக்கெட்டில் சரியாக ஆடவே இல்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் பெரியளவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அவர் நிச்சயமாக இந்த போட்டியில் அல்லது டெல்லியில் நடைபெறும் 2வது டெஸ்டில் கம்பேக் கொடுப்பார். அப்படி இல்லையென்றால் சுப்மன் கில்லுக்கு தான் வாய்ப்பு எனக்கூறப்பட்டுள்ளது.

Story first published: Friday, February 10, 2023, 17:34 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+