ரூ. 35 கோடி பரிசுடன் கிரிக்கெட் வாரியம்br/தொடங்கும் 2 தொடர்கள்-கபிலுக்குப் பதிலடி!
டெல்லி:
ரூ. 35 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய இரண்டு 20-20 போட்டித் தொடர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கபில்தேவின் இந்திய கிரிக்கெட் லீக்குக்குப் போட்டியாக இந்திய பிரிமீயர் லீக்கையும் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக பெரும் பரிசுத் தொகையுடன் கூடிய இரு போட்டித் தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ. 35 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய இந்த போட்டித் தொடர்கள், உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகையுடன் கூடியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக்குக்குப் போட்டியாக, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய பிரிமீயர் லீக்கை தொடங்கியுள்ளது. இதுதவிர 20-20 போட்டித் தொடர் ஒன்றையும் அது அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிவென்டி 20 லீக் போட்டியின் பரிசுத் தொகையாக ரூ. 22 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரிமீயர் லீக் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ. 13 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டுவென்டி20 போட்டித் தொடரில் பங்கேற்க முன்னாள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஷான் வார்னே ஒப்புதல் அளித்துள்ளார். அறிமுகத் தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து 2 முன்னணி அணிகள் பங்கேற்கும்.
இதற்கான அறிவிப்பை, இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவர் லலித் மோடி நேற்று டெல்லியில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே, முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங், ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் கிளன் மெக்கிராத் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு இரு போட்டித் தொடரும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் இந்திய பிரிமீயர் லீக் தொடர் நடைபெறும். சாம்பியன்ஸ் டுவென்டி 20 லீக் போட்டி அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications