கிரிக்கெட் வீரர்களின் காதலிகளுக்கு கட்டுப்பாடு தளர்வு! ஹோட்டலில் தங்க அனுமதி, ஒரே அறைக்கு நோ..!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் காதலிகளுடன் புத்தாண்டை கொண்டாடும் வகையில் தனது விதிமுறையை தளர்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இந்திய வீரர்களின் மனைவிமார்கள் மட்டுமே உடன் இருக்க முடியும், காதலிகளுக்கு அனுமதியில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதே விதிமுறை உலக கோப்பை தொடருக்கும் பொருந்தும் என்று அறிவித்திருந்தது.

புத்தாண்டு கொண்டாட்டம்
ஆஸ்திரேலியாவில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் காலகட்டத்தில்தான் புத்தாண்டும் பிறக்க உள்ளது. புத்தாண்டின்போது மனதுக்கு பிடித்தவர்களுடன் இருக்க வீரர்கள் விரும்புகின்றனர். இந்த கோரிக்கை கிரிக்கெட் வாரியத்தின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.

காதலிகளுக்கும் அனுமதி
வீரர்களின் மனக்குறையை போக்க, மனைவிகள் மட்டுமின்றி காதலிகளும் வீரர்களுடன் நேரத்தை செலவிடலாம் என்று கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது.

கட்டுப்பாடு போட முடியாது
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பாட்டீல் இதுகுறித்து கூறியது: இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம். மனைவிகள் மட்டுமே கணவனுடன் இருக்கலாம், காதலிகள் இருக்க கூடாது என்று கடுமையான சட்டத்தை போட முடியாது. எனவேதான் விதிமுறையை தளர்த்தியுள்ளோம் என்றார்.

உலக கோப்பைக்கு செல்லுபடியாகாது
இந்த விதிமுறை தளர்வு ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டி தொடர் முடியும்வரைதான். உலக கோப்பைக்கு பழைய விதிமுறையே தொடரும்.

ஒரே ஹோட்டல்.. ஆனால் வேறு ரூம்
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்களை சந்திக்க காதலிகள் அனுமதிக்கப்பட்டாலும், ஹோட்டலில் ஒரே அறையில் தங்க அனுமதி கிடையாது. ஹோட்டலில் சாப்பிடலாம், வேறு அறையில் தங்கிக்கொள்ளலாம் என்பது விதிமுறை. மனைவியை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்ற ஐந்து வீரர்களுக்கு மட்டுமே ஹோட்டலில் ஒன்றாக தங்க அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா பறக்கிறார் அனுஷ்கா ஷர்மா
தான் நடித்த பிகே திரைப்படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுள்ள அனுஷ்கா ஷர்மா, தனது காதலன் விராட் கோஹ்லியுடன் சேர்ந்து புத்தாண்டை வரவேற்க ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications