For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஆசியக்கோப்பை தொடரில் தீபக் சஹார்.. பிசிசிஐ போட்ட மெகா ப்ளான்!

மும்பை: ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தீபக் சஹாரை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான போட்டியாக ஆசியக்கோப்பை இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 6வது தங்கம்.. பாரா பளுதூக்குதலில் புதிய சாதனை படைத்த சுதிர் - முழு விவரம்காமன்வெல்த்: இந்தியாவுக்கு 6வது தங்கம்.. பாரா பளுதூக்குதலில் புதிய சாதனை படைத்த சுதிர் - முழு விவரம்

தேர்வுக்குழு கூட்டம்

தேர்வுக்குழு கூட்டம்

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் மோதி வருகிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முடிவடைகிறது. எனவே ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு ஆகஸ்ட் 8ம் தேதி காலை நடைபெறவுள்ளது. இதற்காக மும்பையில் நேரடியாக அனைத்து அதிகாரிகளும் கூடவுள்ளனர்.

அணித் தேர்வு

அணித் தேர்வு

15 பேர் கொண்ட அணியில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு அஸ்வின் இந்த போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இதே போல காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுலுக்கும் நேரடியாக ஆசியக்கோப்பை தொடரில் வாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டது.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நட்சத்திர வீரர் தீபக் சாஹருக்கும் அணியில் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்ட அவர், அதன்பின்னர் ஐபிஎல் தொடர், இங்கிலாந்து என எந்தவொரு போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை.

சில நிபந்தனைகள்

சில நிபந்தனைகள்

ஆனால் தற்போது அவரின் கம்பேக் நேரடியாக ஆசியக்கோப்பையில் இருக்கும் எனக்கூறப்படுகிறது. முழு உடற்தகுதியுடன் உள்ள தீபக் சாஹருக்கு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் ஒரு உடற்தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை கடந்துவிட்டால், சாஹரால் அணியில் பங்கேற்க முடியும் எனக்கூறப்படுகிறது.

மற்றொரு ஏற்பாடு

மற்றொரு ஏற்பாடு

ஒருவேளை அவரின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றால், அவரை ரிசர்வ் பவுலராக அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது மெயின் அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், தீபக் சஹாரை அழைத்துக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Story first published: Friday, August 5, 2022, 13:27 [IST]
Other articles published on Aug 5, 2022
English summary
Deepak chahar in Team India squad for Asia cup 2022 ( ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ) ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹாருக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X