For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பிசிசிஐ தந்த மெகா சர்ப்ரைஸை .. உலகக்கோப்பையில் இனி பலம் தான்.. ரசிகர்கள் குஷி

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்காக மிகப்பெரிய சர்ப்ரைஸை பிசிசிஐ கொடுத்துள்ளது.

Recommended Video

ICC T20 Rankings Suryakumar Yadav முன்னேற்றம்! சரிந்த Virat Kohli *Cricket

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆசியக்கோப்பை தொடரை கைப்பற்றுவதற்காக இந்திய அணிக்கு கிடைத்த கடைசி பயிற்சி ஆட்டம் இதுமட்டும் தான்.

அணி தேர்வு

அணி தேர்வு

இதனை தொடர்ந்து நவம்பரில் டி20 உலகக்கோப்பை தொடரும் வரவுள்ளதால், இரு தொடர்களுக்கும் சேர்த்தே அணி வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில் ரோகித் சர்மா தலைமையில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், பும்ரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் கண்டிப்பாக இடம்பெறுவார்கள் எனத்தெரிகிறது.

ஒரு வீரர் மட்டும் இல்லை

ஒரு வீரர் மட்டும் இல்லை

ஆனால் இதில் கே.எல்.ராகுல் மட்டும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. காயத்தினால் பாதிக்கப்பட்ட அவர் இரு தொடர்களில் இருந்தும் விலகவுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இனி இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

கவனம் ஈர்த்தது எப்படி?

கவனம் ஈர்த்தது எப்படி?

2 ஆண்டுகளாக காயத்தினால் அவதிப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் 15 போட்டிகளில் 487 ரன்களை குவித்தார். இதே போல பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டார். அப்போது இருந்து தற்போது வரை அட்டகாசமான ஃபார்மில் இருந்து வருகிறார்.

கேப்டன்சி வாய்ப்பு எப்படி?

கேப்டன்சி வாய்ப்பு எப்படி?

தென்னாப்பிரிக்க தொடரில் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, அதனைத்தொடர்ந்து அயர்லாந்து தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதில் மிகுந்த பொறுப்புடன் விளையாடி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இப்படிபட்ட சூழலில் தான் தற்போது இந்தியாவின் நிரந்தர துணைக்கேப்டனாக வாய்ப்பு பெற்றுள்ளார். கேப்டனாக ரோகித், துணைக்கேப்டனாக ஹர்திக், பவுலிங்கில் பும்ரா என பலமான கூட்டணி அமைந்துள்ளது.

Story first published: Wednesday, August 3, 2022, 21:53 [IST]
Other articles published on Aug 3, 2022
English summary
Hardik pandya as team india Vice captain ( இந்திய அணி துணைக்கேப்டன் பதவி ) இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பிசிசிஐ மெகா சர்ப்ரைஸை ஒன்றை கொடுத்துள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+