Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தள்ளிப்போகும் ஐபிஎல் 2023 தொடர்.. பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு.. உலகக்கோப்பையில் பாதிப்பு உறுதி??

மும்பை: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 2 - 3 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், அடுத்தாண்டு தான் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பழைய முறையில் நடைபெறவுள்ளது.

அதாவது அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுடைய தக்கைக்கும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. மேலும் மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப்போகிறோம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

தள்ளிப்போகிறதா ஐபிஎல்

தள்ளிப்போகிறதா ஐபிஎல்

இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளாது. வழக்கமாக லீக் போட்டிகள் மார்ச் மாதத்தின் இடையில் அல்லது இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த முறை மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கவிருப்பதால் இது தள்ளிப்போகவுள்ளது.

தேதி மாற்றங்கள்

தேதி மாற்றங்கள்

மகளிருக்கான முதல் ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் 3ம் தேதி தொடங்கவுள்ளது. இது 26ம் தேதி வரை நடைபெறும். எனவே இந்த தொடரை முடித்த கையுடன் உடனடியாக ஆடவருக்கான ஐபிஎல்-யையும் நடத்துவது மிக சிரமம் என்பதால் ஏப்ரல் மாதத்தின் இடையில் அல்லது இறுதிக்கு கொண்டு செல்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாதிப்புகள் என்ன

பாதிப்புகள் என்ன

இப்படி தள்ளிவைப்பதால், இந்திய அணியின் சர்வதேச போட்டிகளும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. 2023ம் ஆண்டு உலகக்கோப்பை அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராக வேண்டிய சூழல் இருக்கும் நேரத்தில் ஐபிஎல் தொடர் இப்படி தள்ளிப்போவதால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Saturday, December 10, 2022, 13:04 [IST]
Other articles published on Dec 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+