Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓரம் கட்டப்பட்ட ஐபிஎல்.. மீண்டும் வருகிறது 2008க்கு முந்தைய நடைமுறை..இந்திய வீரர்களுக்கு இனி சிக்கல்

மும்பை: இந்திய அணிக்கு இனி ஒரு வீரர் தேர்வாக வேண்டும் என்றால் அவ்வளவு சுலபமாக நுழைந்துவிட முடியாது என்பது போல பிசிசிஐ அதிரடி விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

2023ம் ஆண்டின் முதல் நாளன்றே பிசிசிஐ-ன் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா, ரோஜர் பின்னி, ஜெய் ஷா, லக்‌ஷ்மண் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.

இதில் 2023ம் ஆண்டின் இறுதியில் வரக்கூடிய 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2024ம் ஆண்டு வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முன்னேற்பாடுகள் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

இதில் மிகவும் முக்கியமான ஒன்று வீரர்களின் தேர்வு முறை தான். அதாவது இனி வரவுள்ள போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வில் ஐபிஎல் தொடரின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஒரே ஒரு ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிவிட்டனர், ஐபிஎல்-ல் அட்டகாச ஃபார்ம் என்பதையெல்லாம் மட்டும் வைத்து இனி இந்திய அணிக்குள் நுழைந்துவிட முடியாது. 2008க்கு முன்பு என்ன நடைமுறை இருந்ததோ அது இனி மீண்டும் கொண்டு வரப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ராகுல், சஹார், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் தூபே, தேவ்தத் பட்டிக்கல், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு ஐபிஎல்-ஐ வைத்து தான் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் பெரும்பாலானோர் சொதப்பினர். எனவே விஜய் ஹசாரே, ரஞ்சிக்கோப்பை, சையது முஷ்டக் அலி கோப்பை போன்ற உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடினால் தான் இனி வாய்ப்பு என கராராக கூறப்பட்டிருக்கிறது.

ஃபார்ம் அவுட் ஆனால்?

ஃபார்ம் அவுட் ஆனால்?

2008ம் ஆண்டுக்கு முன்பு வரை முழுவதுமாக உள்நாட்டு தொடர்களை வைத்து தான் தேர்வுகள் இருந்தன. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி அந்த பழைய முறையை தான் இனியும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதே போல ஒரு வீரர் ஃபார்ம் அவுட்டானால் இனி உள்நாட்டு தொடர்களுக்கு சென்று ஃபார்மை நிரூபித்துவிட்டு தான் இந்திய அணிக்குள் வர வேண்டும்.

பணிச்சுமை நடவடிக்கை

பணிச்சுமை நடவடிக்கை

இது ஒருபுறம் இருக்க, வீரர்களின் பணிச்சுமைக்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணிக்காக விளையாடி வரும் முன்னணி வீரர்கள் இனி ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு, மற்ற போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, January 2, 2023, 11:10 [IST]
Other articles published on Jan 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+