
இந்திய அணி திட்டம்
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்க இந்திய அணி தயாராவதற்காக பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது அடுத்த 2 மாதங்களில் 5 பெரும் தொடர்களில் இந்திய அணியை விளையாட வைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஜிம்பாவே சுற்றுப்பயணம்
இந்த தொடர் முடிந்தவுடன் ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. வரும் அகஸ்ட் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவிருக்கிறது. இது முடிந்த பிறகு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ஆசியக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.

ஆசியக்கோப்பை போட்டிகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக உள்ள ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டமர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆசியக்கோப்பையில் பெறவுள்ள ஃபார்முடன் நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் திடீரென மாற்றம் கொண்டு வந்துள்ளது பிசிசிஐ.

2 புதிய தொடர்கள்
ஆசியக்கோப்பை செப்.11ம் தேதி முடிவடைந்தவுடன், செப்டம்பர் 20ம் தேதி முதல் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன்பின் இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிசிசிஐ பலே ஐடியா
உலகக்கோப்பைக்கு முன்னதாக சக்தி வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுட்ன் மோதி வெற்றி பெற்றுவிட்டால், பெரும் நம்பிக்கையுடன் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம் என்ற திட்டத்தில் பிசிசிஐ இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications