Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!

மும்பை: ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தயாராவதற்காக ஸ்பெஷல் பயிற்சி ஏற்பாடுகளை செய்துக்கொடுத்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துவிட்ட சூழலில் கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடர் முடிந்தவுடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்த தொடர் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. எனவே அந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற வேண்டும் அல்லது சமன் செய்தே தீர வேண்டும்.

பிசிசிஐ ஏற்பாடு

பிசிசிஐ ஏற்பாடு

இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராவதற்காக பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு செய்துள்ளது. அதாவது நாக்பூரில் 2 இடங்களில் இந்தியாவுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. பிப்ரவரி 2ம் தேதியன்று அனைத்து வீரர்களும் நாக்பூரில் ஒன்றுக்கூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் நாக்பூருக்கு சென்றுவிடுவார்.

5 பயிற்சி செஷன்கள்

5 பயிற்சி செஷன்கள்

அங்கு மொத்தமாக 5 செஷன்கள் நடத்தப்படுகிறது. அதன்படி முதல் 3 செஷன்கள் அங்குள்ள பழைய விதர்பா கிரிக்கெட் வாரிய மைதானத்தில் நடைபெறுகிறது. பல டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள இந்த மைதானத்தில் தற்போது சர்வதே போட்டிகள் நடைபெறுவதில்லை. இங்குள்ள களமும் புதிய விதர்பா கிரிக்கெட் வாரிய மைதானத்தில் உள்ள களமும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால் அங்கு பயிற்சி பெறவுள்ளனர்.

சீனியர்களின் கம்பேக்

சீனியர்களின் கம்பேக்

மீதமுள்ள 2 செஷன் பயிற்சிகளை புதிய மைதானத்தில் பெறுவார்கள். இங்கு தான் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. ரோகித் சர்மா, முகமது ஷமி, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் ஒருவார ஓய்வுக்கு பின் கம்பேக் தரும் சூழலில் ரவீந்திர ஜடேஜாவும் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்.

Story first published: Tuesday, January 31, 2023, 13:30 [IST]
Other articles published on Jan 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+