வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் மாற்றம்.. 3 வீரர்களுக்கு வாய்ப்பு
டாக்கா : வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்ககிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என்றால் வங்கதே டெஸ்ட் தொடரில் முழுமையாக வெல்ல வேண்டும்.
இந்த நிலையில் ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக மாற்று வீரரும், ஜடேஜா, ஷமிக்கு பதில் மாற்று வீரர்களும் தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

பேட்ஸ்மேன்கள்
ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளார். ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய ஏ அணியின் கேப்டனாக செயல்படும் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சுப்மான் கில்லுக்கு தான் முன்னூரிமை வழங்கப்படும். புஜாரா,விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் என நடுவரிசை வீரர்கள் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடுகிறார்கள்.

சுழற்பந்துவீச்சாளர்கள்
ஒருநாள், டி20 போட்டியில் திணறினாலும், டெஸ்ட் போட்டியில் தனக்கு என ஒரு பெயரை பெற்றுள்ள ரிஷப் பண்ட், வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 சுழற்பந்தவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என மூன்று வீரர்களும் முறையே 7,8, மற்றும் 9வது இடத்தில் விளையா உள்ளார்கள். காயமடைந்த ஜடேஜாவுக்கு பதில் சௌரப் குமாருக்கு வாய்பபு வழங்கப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்கள்
முகது ஷமி காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், அவருக்கு பதில் நவதீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவ் ,முஹம்மது சிராஜ் என நட்சத்திர வீரர்களும், 12 ஆண்டுகளுக்கு பிறகு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்திய அணி
கேஎல் ராகுல், சுப்மான் கில், அபிமன்யூ ஈஸ்வரன், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பண்ட், கேஎஸ் பரத், அஸ்வின், அக்சர் பட்டேல், சௌரப் குமார், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ,முஹம்மது சிராஜ், நவதீப் சைனி ,ஜெய்தேவ் உனாட்கட்


Click it and Unblock the Notifications