Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பவுலர்களுக்குமே வாய்ப்பில்லை.. அயர்லாந்து தொடரில் பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. கடுப்பில் ரசிகர்கள்

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் ஒரு பெரிய பாரபட்சம் பார்ப்பது தெரியவந்துள்ளது.

தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய இந்திய அணி அடுத்ததாக அயர்லாந்துக்கு சென்றுள்ளது.

அங்கு நாளை முதல் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதவுள்ளது.

அயர்லாந்து டி20 தொடர்

அயர்லாந்து டி20 தொடர்

முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பண்ட் உள்ளிட்டோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றிருப்பதால், அயர்லாந்து தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் அணி உருவாக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்படவுள்ளார்.

ப்ளேயிங் 11 தேர்வு

ப்ளேயிங் 11 தேர்வு

நாளை நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான ப்ளேயிங் 11 தேர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதி ஹர்திக் பாண்ட்யா என சரியான லைன் அப் உள்ளன. எனினும் பவுலிங்கில் தான் புதிய குழப்பம் எழுந்துள்ளது.

 வாய்ப்பு கிடையாது

வாய்ப்பு கிடையாது

தென்னாப்பிரிக்க தொடரில் கலக்கிய புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான் என 3 முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் தயாராக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பில்லை எனத்தெரிகிறது. துணைக்கேப்டனான புவனேஷ்வர் குமாரே ஒருபோட்டியில் தான் ஆடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 காரணம் என்ன

காரணம் என்ன

அயர்லாந்து தொடருக்கு பின்னதாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் என மொத்தமாக 6 போட்டிகள் உள்ளன. இந்த போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நல்ல ஃபார்மில் இருக்கும் பவுலர்களில் ஹர்ஷல் பட்டேல் மற்றும் புவனேஷ்வர் குமார் இருக்கின்றனர்.

மாற்று வீரர்கள் யார்

மாற்று வீரர்கள் யார்

இவர்களுக்கு அயர்லாந்து தொடரின் போது ஏதேனும் காயம் ஏற்பட்டுவிட்டால், அது இங்கிலாந்துடனான 6 போட்டிகளில் பாதிப்பை உண்டாக்கும். எனவே அவர்களை உட்காரவைத்துவிட்டு, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை களமிறக்க வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் திட்டமிட்டுள்ளார்.

Story first published: Saturday, June 25, 2022, 12:37 [IST]
Other articles published on Jun 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+