Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதான தேர்வில் இப்படி ஒரு திட்டமா??.. ஆஸி, தொடருக்கு ஏன் பிரபல மைதானங்கள் இல்லை?? காரணம் இதோ!

ஆஸ்திரேலியாவுடனான தொடருக்காக மைதானத்தில் கூட பிசிசிஐ பலே திட்டத்தை ஒளித்து வைத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளன.

முதல் டி20 போட்டி இன்று இரவு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளுடன் மோதும் போது, வழக்கமாக இந்தியாவின் பிரபல மைதானங்களை தான் பிசிசிஐ தேர்வு செய்யும். அதாவது மும்பை வான்கடே, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், சேப்பாக்கம் போன்ற மைதானங்களில் நடத்தப்படும். ஆனால் இந்த முறை மொஹாலி, விதர்பா மைதானம், ராஜீவ் காந்தி மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்

பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்

இந்நிலையில் இதில் தான் பிசிசிஐ பலே திட்டத்தை வைத்துள்ளது. இந்த மூன்று மைதானங்களுமே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். இதே போல பேட்ஸ்மேன்களும் சுலபமாக ஷாட்களை அடிப்பதற்கு உதவும். போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றாலும், பிட்ச்-கள் ஆஸ்திரேலியாவுக்கு தான் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன. எனினும் பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் தான் இந்த டி20 தொடரும் நடைபெறுகிறது. எனவே ஆஸ்திரேலியாவில் இருப்பதை போன்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களங்களில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடினால் தான், உலகக்கோப்பைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பெரும் நம்பிக்கை

பெரும் நம்பிக்கை

இதனை மனதில் வைத்து தான் பிசிசிஐ வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களை தேர்வு செய்துள்ளது. இதே போல முழு பலத்துடனும் விளையாடுகிறது. இதில் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், இந்தியாவுக்கு பெரும் நம்பிக்கை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Story first published: Tuesday, September 20, 2022, 15:00 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+