இனி பிரச்சினை தீர்ந்தது.. பண்ட் - சஞ்சுவை வைத்து பிசிசிஐ போட்ட கணக்கு.. இலங்கை தொடரில் மாற்றம்!
மும்பை: இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை வைத்து பிசிசிஐ அட்டகாச திட்டத்தை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டை வங்கதேசத்துடனான டெஸ்ட் வெற்றியுடன் முடித்துக்கொண்ட இந்திய அணி 2023ம் ஆண்டை இலங்கை அணியுடனான தொடர்களுடன் தொடங்கவுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இந்த தொடர் வரும் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்
இந்த தொடருக்கான இந்திய அணியை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. சேட்டன் சர்மா தலைமையிலான குழு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் கேப்டன் கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, கே.எல்.ராகுல், தீபக் சஹார் போன்றோர் இடம் பெற மாட்டார்கள் எனத்தகவல் வெளியானது. விராட் கோலியும் ஓய்வு கேட்டதாக தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உடற்தகுதியை பொறுத்து இடம்பெறுவார்கள்.

பிசிசிஐ எடுத்த முடிவு
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட்-க்கு ஓய்வு தராமல் அதிரடியாக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் படு மோசமாக சொதப்பி வரும் பண்ட்,ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மறுபுறம் சீனியர் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

தொடர்ந்து வாய்ப்புகள்
இந்த இலங்கை தொடரை பயன்படுத்திக்கொண்டுள்ள பிசிசிஐ, சஞ்சு சாம்சனுக்கு முழுமையாக வாய்ப்புகளை கொடுத்து சோதித்து பார்க்கவுள்ளது. ஒருவேளை சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டால், பண்ட்-க்கு பதிலாக அவரே நீடிப்பார். ஆனால் சொதப்பினால், ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதனை எடுத்துக்கொண்டு தொடர்ந்து பண்ட்-க்கு வாய்ப்பு தருவார்கள் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

வசீம் நம்பிக்கை
இதனை இந்திய முன்னாள் வீரர் வசீம் ஜாஃபரும் மறைமுகமாக கூறியுள்ளார். அதில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் வசீம் ஜாபர் இடம் பிடிப்பார் என நம்புகிறேன். அதன்பிறகு நீண்ட காலத்திற்கு அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications