For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அட இது நல்லா இருக்கே..” விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப ஸ்பெஷல் ஏற்பாடு.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது!

மும்பை: விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப பிசிசிஐ சார்பில் ஸ்பெஷல் ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தான் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு தரப்பட்டுள்ளது. மோசமான ஃபார்மில் உள்ள கோலி ஒருமாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஆசியக்கோப்பை தொடரில் கம்பேக் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிசிசிஐ-ன் முடிவு

பிசிசிஐ-ன் முடிவு

இந்நிலையில் அதிலும் புதிய மாற்றத்தை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி ஆசியக்கோப்பைக்கு தயாராகும் வேளையில், இளம் படையை கொண்ட மற்றொரு அணி ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ளது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான அணி தான் செல்லும் என தெரிகிறது.

விராட் கோலிக்கு வாய்ப்பு

விராட் கோலிக்கு வாய்ப்பு

ஆகஸ்ட் 18 - 22ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இளம் வீரர்களுடன் விராட் கோலியும் பங்கேற்று விளையாடவுள்ளார். ஜிம்பாவேவுடன் விளையாடி தனது நம்பிக்கை மற்றும் ஃபார்மை மீண்டும் பெற்றுவிட்டு, அவர் ஆசியக்கோப்பை தொடரில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் சிக்கல்

திடீர் சிக்கல்

இதனையடுத்து ஜிம்பாவே அணியுடன் தனது முழு அதிரடி ஆட்டத்தையும் காண்பிக்க முயற்சி செய்யுமாறு கோலிக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. எனினும் இந்த சிறிய அணியுடனும் சொதப்பிவிட்டால், பின்னர் டி20 உலகக்கோப்பை தொடரில் கோலியின் வாய்ப்பு கேள்விக்குறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 21, 2022, 10:24 [IST]
Other articles published on Jul 21, 2022
English summary
virat kohli in zimbave series ( ஜிம்பாவே தொடரில் விராட் கோலி ) விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவதற்கு பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாட்டை செய்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+