Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்தியர்களே வேண்டாம்” புதிய பயிற்சியாளர் பதவி.. இலங்கை ஜாம்பவான்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை!

மும்பை: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு அயல்நாட்டை சேர்ந்தவர் தான் நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலகவுள்ளார்.

இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களை சூழ்ந்துள்ளது.

 அடுத்த பயிற்சியாளர் யார்?

அடுத்த பயிற்சியாளர் யார்?

இலங்கை தொடருக்கு பயிற்சியாளராக பணியாற்றியதன் மூலம் ராகுல் டிராவிட் தான் அடுத்த தலைமை பயிற்சியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் அவருக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டார். எனவே அதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

மீண்டும் கும்ப்ளே ?

மீண்டும் கும்ப்ளே ?

டிராவிட் இல்லையென்றால், அடுத்த தேர்வாக இந்திய முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளே நியமிக்கப்படலாம் எனக்கூறப்பட்டு வருகிறது. அனில் கும்ப்ளே ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். அப்போது விராட் கோலி மற்றும் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கும்ப்ளே பதவி விலகினார். எனினும் அவரை மீண்டும் பயிற்சியாளராக நியமிப்பதற்கு பிசிசிஐ முயற்சித்து வருகிறது.

பிசிசிஐ-க்கு அதிர்ச்சி

பிசிசிஐ-க்கு அதிர்ச்சி

இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பிக்க விருப்பம் இல்லை என கும்ப்ளே கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வீரர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது. அதே வீரர்கள் தான் தற்போதும் அணியில் உள்ளனர். எனவே நான் மீண்டும் அந்த பதவிக்கு செல்ல விரும்பவில்லை எனத்தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, வி.வி லக்‌ஷ்மணுக்கு பயிற்சியாளர் ஆகும் ஆர்வம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ அதற்கு ஆர்வம் காட்டவில்லை.

பிசிசிஐ பேச்சுவார்த்தை

பிசிசிஐ பேச்சுவார்த்தை

இந்நிலையில் இவர்களை தவிர்த்து இந்திய முன்னாள் வீரர்கள் யாரையும் பயிற்சியாளராக நியமிப்பதற்கு பிசிசிஐ விரும்பவில்லை. எனவே அயல்நாட்டை சேர்ந்த சிறந்த முன்னாள் வீரர்களை தான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்காக இலங்கை முன்னாள் வீரர்கள் ஜெயவர்தனே அல்லது சங்ககாராவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

Story first published: Wednesday, September 29, 2021, 15:40 [IST]
Other articles published on Sep 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+