For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்ரீம் கோர்ட்-க்கு சென்ற கங்குலி.. பதவியை காப்பாற்றிக்கொள்ள அவசர திட்டம்.. காரணம் என்ன தெரியுமா?

மும்பை: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்திய அணியில் கேப்டன்சி மாற்றங்கள், ப்ளேயிங் 11 மாற்றங்கள் என பல்வேறு குழப்பம் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில் பிசிசிஐ அதிகாரிகளும் மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

பிசிசிஐ-ன் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயல் அதிகாரி ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. தற்போது இருக்கும் விதிமுறைகள் படி இவர்களால் தொடர்ந்து பிசிசிஐ அதிகாரிகளாக செயல்பட முடியாது. எனவே அவசர அவசரமாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

தற்போதுள்ள பிசிசிஐ விதிமுறைகள்படி பிசிசிஐ அல்லது மாநில வாரியங்களில் ஒருவரால் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் தான் பதவி வகிக்க முடியும். அதன்பின் கட்டாயமாக 3 ஆண்டுகளுக்கு எந்தவித பதவிக்கும் போட்டியிட முடியாது. இந்த விதிமுறையை மாற்றி அமைப்பதற்காக கடந்த 2019ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தொடரப்பட்ட வழக்கு நிலுவையிலேயே உள்ளது.

முந்தைய பதவிகள்

முந்தைய பதவிகள்

கங்குலி கடந்த 2014ம் ஆண்டு முதல் மேற்கு வங்க வாரியத்தின் தலைவராக இருந்தார். ஜெய் ஷா 2013ம் ஆண்டு முதல் குஜராத் வாரியத்தின் உறுப்பினராக இருந்தார். இதன்பின்னர் தான் பிசிசிஐ-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அந்த வழக்கில் நிலுவையில் இருப்பதால், இவர்களை பதவியில் இருந்து நீக்க முடியவில்லை.

உடனடி தீர்ப்பு?

உடனடி தீர்ப்பு?

இந்நிலையில் இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என கங்குலி மற்றும் ஜெய் ஷா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புதிய விதிமுறைக்கு அனுமதி கிடைத்துவிட்டால், கங்குலி மற்றும் ஜெய் ஷாவால் மீண்டும் அதே பதவிகளுக்கு போட்டியிட முடியும்.

Story first published: Friday, July 15, 2022, 21:01 [IST]
Other articles published on Jul 15, 2022
English summary
BCCI moves to Supreme Court ( உச்சநீதிமன்றத்திற்கு சென்ற பிசிசிஐ ) பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+