உள்நாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடும் மினி ஐபிஎல் தொடர்.. பிசிசிஐ திட்டம்
மும்பை: மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ சார்பில் தற்போது, ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. பல மாநிலங்களின் வாரியங்கள், தங்கள் மாநிலத்திற்குள் டி20 போட்டிகளை நடத்த தொடங்கியுள்ளன. இதுபோன்ற உள்ளூர் போட்டிகளில், சூதாட்டம் நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பது கஷ்டம். எனவே, இந்திய இளம் வீரர்களுக்காக பிசிசிஐ சார்பில் மினி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மினி ஐபிஎல் போட்டியில், முழுக்க முழுக்க இந்திய வீரர்களை கொண்டே அணிகள் அமைக்கப்படும், இதில் சிறப்பாக ஆடுவோர்கள் ஐபிஎல் முதலீட்டாளர்களால் இனம் காணப்பட்டால், அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கும். நவம்பர் 9ம் தேதி இதுபற்றி பிசிசிஐ அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
Story first published: Thursday, October 22, 2015, 17:16 [IST]
Other articles published on Oct 22, 2015


Click it and Unblock the Notifications