Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மனித உடல் பேட்டிங் செய்யவே ஒத்துழைக்கும்.. வேகப்பந்து வீசுவதற்கு..”.. எச்சரித்த ஜாம்பவான் கபில் தேவ்

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயமடைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை பிசிசிஐ தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

ஜிடோ பிரீமியர் லீக் தொடக்க விழாவில் பேசிய கபில்தேவ், வீரர்கள் தங்கள் உடலமைப்பைப் புரிந்துகொண்டு பணிச்சுமையைச் சரியாக நிர்வகிக்க வேண்டும் என்றார். "தற்போது அதிகளவில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். மனித உடல் உண்மையில் பேட்டிங் செய்யவே இயற்கையாக ஒத்துழைக்கும், வேகப்பந்து வீசுவதற்கு அல்ல. எனவே, ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு எவ்வளவு பணிச்சுமை கொடுக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ தனிக் கவனம் செலுத்த வேண்டும்" என்று கபில்தேவ் கூறினார்.

BCCI Must Manage Fast Bowlers Workload to Prevent Injuries says Kapil Dev

மேலும், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணி சமீப காலமாக தடுமாறுவது குறித்தும் அவர் பேசினார். முன்னணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் போதுமான அளவு விளையாடாததே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். மூத்த வீரர்கள் பல நாட்கள் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இளம் வீரர்கள் மூத்த வீரர்களிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்குகிறது. இத்தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். பணிச்சுமை அதிகரிப்பால் நிதிஷ் குமார் ரெட்டியும் காயமடைந்துள்ளார். கேப்டன் சுப்மன் கில் பயிற்சி ஆட்டத்தின்போது கையில் காயம் அடைந்தார்.

பிறந்தநாளில் உலக சாதனை.. ஜாம்பவான் சச்சினின் ரெக்கார்டை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர் செடிகுல்லா அடல்

பிறந்தநாளில் உலக சாதனை.. ஜாம்பவான் சச்சினின் ரெக்கார்டை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர் செடிகுல்லா அடல்

தற்போது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த இலங்கை தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த நிலையில் வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 13 வீரர்கள் பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் காயத்துக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Story first published: Thursday, August 13, 2026, 9:19 [IST]
Other articles published on Aug 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+