For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்ன ஒரு அதிர்ஷ்டம்” டிராவிட்-ன் அதீத நம்பிக்கையை பெற்ற புதுமுகம்..முதல் டெஸ்டுக்கு டைரக்ட் எண்ட்ரி

மும்பை: நியூசிலாந்து தொடரிலும் வாய்ப்பு கிடைக்காது என்றிருந்த இளம் வீரருக்கு பிசிசிஐ சர்ஃப்ரை பேக்கேஜை கொடுத்துள்ளது.

Recommended Video

Suryakumar Yadav added to Test squad for New Zealand series | OneIndia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்ததை அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 25ம் தேதியன்று கான்பூர் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் தான் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓய்வில் உள்ள விராட் கோலி முதல் டெஸ்டுக்கு வரமாட்டார் என்பதால் ரகானேவின் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. விராட் கோலியை போன்றே சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர் விலகல்

நட்சத்திர வீரர் விலகல்

இதனால் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஆனால் இந்திய அணியின் தூணாக பார்க்கப்பட்ட ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலுமே ராகுல் இருக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வீரர் அறிவிப்பு

மாற்று வீரர் அறிவிப்பு

இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக சூர்யகுமாரை களமிறக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவதற்காக காத்துக்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே அணியில் இருந்தார். ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்து தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்ததால் சூர்யகுமார் ஓரம் கட்டப்பட்டார்.

 சூர்யகுமாருக்கு வந்த அதிர்ஷ்டம்

சூர்யகுமாருக்கு வந்த அதிர்ஷ்டம்

இப்படிபட்ட சூழலில் அதிர்ஷ்டம் அடித்தது போன்று நேரடியாக பிசிசிஐ-யே சூர்யகுமார் யாதவ் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார் என்பதை அறிவித்துள்ளது. 31 வயதாகும் சூர்யகுமார் யாதவ், இதுவரை 77 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதம் மற்றும் 26 அரைசதத்துடன் 5,356 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அவரின் சராசரி 44 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 23, 2021, 21:35 [IST]
Other articles published on Nov 23, 2021
English summary
BCCI named Suryakumar yadhav as replacement for KL rahul in 1st test match against newzealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+