For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஜித் அகார்கர் முன் காத்திருக்கும் சவால்கள் என்ன? தேர்வுக்குழுத் தலைவராக செய்ய போகும் மாற்றம் என்ன?

மும்பை : பிசிசிஐ தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நீண்ட நாட்களாக தலைமை இல்லாமல் செயல்பட்டு வந்த தேர்வு குழுவுக்கு ஒரு புத்துணர்வு கிடைத்திருக்கிறது. நீண்ட நாட்களாகவே தேர்வுக்குள் தலைவராக இருக்கும் நபர்களின் செயல்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு கூட பறிபோயிருக்கிறது. இதற்கு முன்பு இருந்த எம்எஸ்கே பிரசாத்தாக இருந்தாலும் சரி அதன் பிறகு வந்த சேத்தன் சர்மாவாக இருந்தாலும் சரி இருவருமே தேர்வு குழு தலைவராக மோசமான பணியை செய்திருக்கிறார்கள்.

BCCI New chief selector ajit agarkar challenges and responsiblity ahead of him

இந்த நிலையில் அஜித் அகார்க்கர் ரசிகர்களை சமாதானப்படுத்தும் வேலையை தான் முதலில் செய்ய இருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்பதை அஜித் அகார்கர் முதலில் உறுதி செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் சர்பிராஸ்கான், அபிமன்யு ஈஸ்வரன், பிரயாங்க் பாஞ்சல், ஹனுமா விகாரி போன்ற வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இந்திய டெஸ்ட் அணியில் பல குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் சராசரி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் சரியாக விளையாட வீரர்கள் ஒவ்வொருவராக களையெடுக்க வேண்டும். இதன் காரணமாக புதிய மற்றும் பலம் வாய்ந்த டெஸ்ட் அணியை அஜித் அகார்கர் தயார் செய்ய வேண்டும். இதேபோன்று அஜித் அகாதற்கு இருக்கும் மிகப்பெரிய பணி என்றால் அது 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்தான்.

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வு குழு சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். பும்ரா, கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கியமான வீரர்கள் காயத்தால் தற்போது அவதிப்பட்டு வருகிறார்கள். தேர்வு குழு ஏற்கனவே பும்ராவை அவசரக்குதியில் இந்திய அணிக்கு கொண்டு வந்ததால் அவருடைய காயம் மேலும் மோசமானது. இதனைக் கருத்தில் கொண்டு பும்ரா போன்ற வீரர்களை அஜித் அகார்கர் சரியாக கையாள வேண்டும்.

இந்திய அணியின் நடுவரிசை யார்? இந்திய அணியில் எந்த சுழற் பந்துவீச்சாளர்கள் வேண்டும்? எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்பதை எல்லாம் அஜித் அகார்கர் இந்திய அணி நிர்வாகத்துடன் இணைந்து புதிய பிளானை தீட்ட வேண்டும். இதேபோன்று டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான அணியை அஜித் அகாக்கர் இப்போது இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் பலரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். வீரர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை, சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு, வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கான விளக்கம் ஆகிய குறைகளை அஜித் அகார்கர் உடனடியாக தீர்வு காண வேண்டும் அஜித் அகர்கர் ஏற்கனவே மும்பை ரஞ்சி அணியின் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டதால் அவருக்கு இதில் அனுபவம் இருக்கிறது.. பயிற்சியாளர் டிராவிட்ட உடன் விளையாடிய வீரர் என்பதால் இந்திய அணி தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது.

Story first published: Tuesday, July 4, 2023, 22:41 [IST]
Other articles published on Jul 4, 2023
English summary
BCCI New chief selector ajit agarkar challenges and responsiblity ahead of him அஜித் அகார்கர் முன் காத்திருக்கும் சவால்கள் என்ன? தேர்வுக்குழுத் த லைவராக செய்ய போகும் மாற்றம் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+