Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசத்தலான புதிய மைதானம்..! அடிக்கல் நாட்டிய கங்குலி, ஜெய்ஷா.. புதிய கிரிக்கெட் தலைநகராகும் பெங்களூர் ?

பெங்களூர்: இந்தியாவின் கிரிக்கெட் தலைநகரம் என்றால் மும்பை என்று சொல்வார்கள். மும்பையில் தான் பிசிசிஐ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மும்பையின் செல்வாக்கை கொஞ்சம் அசைத்துப் பார்க்க வந்துள்ளது தென்னிந்திய நகரமான பெங்களூர்.

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக செயல்பட்டு வருவது தேசிய கிரிக்கெட் அகாடமி. தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

வரப்பிராசதம்

வரப்பிராசதம்

காயமடைந்த வீரர்கள் குணமடைந்து மீண்டும் முழு உடல் தகுதியை பெற பெங்களூர் தான் வர வேண்டும். இதை தவிர இளம் வீரர்களுக்கு என்று தனி பயிற்சி, ஃபார்ம் இழந்த வீரர்களுக்கு தனி பயிற்சி என அனைத்தும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் வழங்கப்படும்.

சின்னசாமி மைதானம்

சின்னசாமி மைதானம்

ஃபார்ம் இல்லையா, பயிற்சி எடுக்க வேண்டுமா வெளிநாடு செல்ல தேவையில்லை. பெங்களூரில் உள்ள தேசிய அகாடமிக்கு செல்லுங்கள் என்பது தான், கடந்த 20 ஆண்டுகளாக அனைவரின் பதிலாக இருக்கும். இந்த நிலையில், தற்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தான் தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது.

புதிய அகாடமி

புதிய அகாடமி

இதனை உலக தரத்துக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்துள்ள பிசிசிஐ பல கோடிகளை செலவு செய்து புதிய தேசிய அகாடமியை பெங்களூரில் நிறுவ முடிவு எடுத்தது. அதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

உலகத்தர வசதி

உலகத்தர வசதி

புதிய தேசிய அகாடமியின் மாதிரி புகைப்படங்களை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ளார். அதில் மூன்று அழகிய பெரிய கிரிக்கெட் மைதானங்களும், வீரர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஜிம், நீச்சல் குளம், வீரர்கள் தங்கி கொள்ள விடுதி, இரவில் பயிற்சி செய்ய மின்விளக்குகள் என பல்வேறு உலகத்தர வசதிகள் செய்யப்படுகிறது.

Story first published: Monday, February 14, 2022, 17:43 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+