For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பதவியேற்றவுடனே பஞ்சாயத்தா..? ரோஜர் பின்னி கைவைத்த 2 தடாலடி விஷயங்கள்.. பிசிசிஐ மர்மத்திற்கு முடிவா??

மும்பை: பதவியேற்றவுடன் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி 2 முக்கிய விஷயங்களில் தடாலடி முடிவை எடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ஜெய் ஷாவே தொடர்ந்து நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

ரோஜர் பின்னி நடவடிக்கை

ரோஜர் பின்னி நடவடிக்கை

புதிய தலைவருக்காக தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரின் ஆதரவுடன் ரோஜர் பின்னி கெத்துக்கட்டினார். இந்நிலையில் அவர் பதவியேற்றவுடன் கூறியுள்ள விஷயங்களும் அதிரடியாக உள்ளது. அதாவது இந்திய அணி வீரர்களுக்கு எப்படி இத்தனை காயங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஆராயத் தொடங்கியுள்ளார். குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வில் நடந்த குழப்பங்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்.

 முதல் திட்டம்

முதல் திட்டம்

இதுகுறித்து பேசிய அவர், இனி இந்திய வீரர்களின் காயம் எப்படி வருகிறது என்பதையும், அவர்களை எப்படி பாதுகாக்க முடியும் என்ற திட்டத்தை வகுக்கவுள்ளேன். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பும்ரா காயமடைந்ததால் ஒட்டுமொத்த திட்டமும் சொதப்பியது. இதே போல தீபக் சஹாரும் கடைசி நேரத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டார்.

தீபக் சஹாருக்கு சிக்கல்

தீபக் சஹாருக்கு சிக்கல்

குறிப்பாக தீபக் சஹார் பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து, தற்போது எப்படி மீண்டும் காயம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இந்தாண்டு தீபக் சஹாருக்கு ஏற்படும் 3வது காயம் இதுவாகும். எனவே இதனை அனைத்தையும் கட்டுக்கொள் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

2வது திட்டம் என்ன?

2வது திட்டம் என்ன?

தொடர்ந்து பேசிய அவர், எனது 2வது திட்டம், நாடு முழுவதும் உள்ள மைதான பிட்ச்-களை மாற்றப்போகிறேன். நம் நாட்டின் களங்களில் இன்னும் நீண்ட காலம் விளையாட வேண்டும். அதுவும் பிட்ச்-ன் தன்மையை மாற்ற வேண்டும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள வேகத்தையும், பவுன்சையும் இந்திய வீரர்கள் பழக வேண்டியதாக உள்ளது. எனவே அதற்கேற்ற வகையில் இந்தியாவில் பிட்ச் உருவாக்கப்படும் என ரோஜர் பின்னி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 18, 2022, 23:38 [IST]
Other articles published on Oct 18, 2022
English summary
BCCI New president Roger Binny wants to change to two major things in Indian Cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+