Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர் வீரர்கள் - பிசிசிஐ இடையே வாக்குவாதம்?.. தென்னாப்பிரிக்க டூரால் வந்த பிரச்னை.. விவரம் என்ன?

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் இந்திய வீரர்கள் மற்றும் பிசிசிஐ இடையே விவாதம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனை முடித்தவுடன் இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

நீண்ட நாள் தொடர்

நீண்ட நாள் தொடர்

அங்கு வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் என நெடும் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது. தற்போது ஓய்வில் உள்ள இந்திய சீனியர் வீரர்கள், இந்த தொடரின் போது மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். இதனால் இந்திய குழுவானது வரும் 9ம் தேதியன்று தனி விமானம் மூலம் அங்கு புறப்படவிருந்தது.

சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

ஆனால் அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கூட 2 பேருக்கு அந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. மேலும் புறப்படும் தேதியும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் தயக்கம்

வீரர்கள் தயக்கம்

இந்நிலையில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து இந்திய அணிக்குள் மனக்கசப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுற்றுப்பயணம் செல்வது குறித்து முடிவெடுக்க வீரர்கள் மற்றும் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் பலரும் அங்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

Recommended Video

India’s cricket tour to South Africa to be delayed by a week amid Omicron scare | Oneindia Tamil
 அணிக்குள் குழப்பம்

அணிக்குள் குழப்பம்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி தொடரை நடத்தியே தீர வேண்டும் என பிசிசிஐ உள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும் தொடரை ரத்து செய்தே தீர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்திய அணிக்குள்ளேயே தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Story first published: Friday, December 3, 2021, 18:48 [IST]
Other articles published on Dec 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+