“முன்பு ஹர்திக்.. இப்போ கோலி“ ஓய்வு கொடுத்ததன் பின் இப்படி ஒரு திட்டமா?.. பிசிசிஐ அதிகாரி விளக்கம்
மும்பை: விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவதற்காக பிசிசிஐ போட்டுள்ள திட்டத்தை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
வரும் ஜூலை 22ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் டூர்
இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ சார்பில் ஒருபுறம் விளக்கம் அளிக்கப்படுகிறது. மற்றொருபுறம் அவரை இனி டி20 கிரிக்கெட்டில் புறக்கணிப்பதற்காக தான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரியின் விளக்கம்
இந்நிலையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை பிசிசிஐ அதிகாரி விளக்கியுள்ளார். அதில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வின் போது கோலியிடம் பேசினோம். கோலியை நாங்கல் நீக்கவில்லை. அவர் தான் தனக்கு ஓய்வு வேண்டும். எனவே விட்டுவிடுங்கள் எனக்கூறினார்.

என்ன காரணம்
கோலி கூறிய காரணம் எங்களுக்கு நியாயமாக தான் இருந்தது. ஓய்வு காலத்தில் நல்ல பயிற்சியை மேற்கொண்ட பின்பு, மீண்டும் ஃபார்முக்கு வந்துவிடுவேன் என கோலி உறுதியாக கூறினார். அவர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நாங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம். ஆசியக்கோப்பை தொடரின் போது விராட் கோலியை நல்ல ஃபார்மில் காணலாம் என அதிகாரி கூறியுள்ளார்.

மீண்டும் அதே திட்டம்
மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஹர்திக் பாண்ட்யாவும் நீண்ட ஓய்வில் இருந்தார். அந்த ஓய்வின் பலனாக தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதே போன்ற முயற்சியை தான் விராட் கோலியும் எடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications