"இதை சொல்லவே இல்லையே”..இந்தியா - தென்னாப்பிரிக்க தொடர்.. வீரர்கள் தேர்வில் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் 50 லீக் போட்டிகளை கடந்து இறுதிகட்டத்தை நெருங்கி வருகின்றன.
வரும் மே 24ம் தேதியன்று ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்கி, மே 29ம் தேதியன்று இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்த தொடர் முடிந்தவுடனேயே இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. எனவே இதற்கான வீரர்கள் தேர்வில் தற்போது பிசிசிஐ குதித்துள்ளது.

அணித்தேர்வுகான ஆலோசனை
அணித்தேர்வுக்காக ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக வரும் மே 23ம் தேதியன்று பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவுள்ளார். ஐபிஎல் தொடரின் செயல்பாடுகளை பொறுத்தும், ஃபிட்னஸை பொறுத்தும் இவை நடக்கவுள்ளது. மே 25ம் தேதிக்குள் இந்திய அணி அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.

திடீர் திருப்பம்
இந்நிலையில் இந்த போட்டியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு தரப்படவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ரோகித் சர்மா கண்டிப்பாக கலந்துக்கொள்ளவுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

பெங்களூரு விசிட்
தேர்வு செய்யப்படவுள்ள அனைத்து வீரர்களும் ஐபிஎல் முடிந்தவுடன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லவுள்ளனர். அங்கு அவர்களின் உடற்தகுதியை பார்த்த பிறகே முதல் டி20 போட்டிக்காக டெல்லிக்கு புறப்படவுள்ளதாக தெரிகிறது.

போட்டி அட்டவணை
முதல் டி20 - ஜூன் 9
2வது போட்டி - ஜூன் 12
3வது டி20 - ஜூன் 14
4வது டி20 - ஜூன் 17
5வது டி20 - ஜூன் 19


Click it and Unblock the Notifications