Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் செய்த தவறுகள்.. வெளியான பட்டியல்.. மொத்தமாக காலி.. வேலையைக் காட்டிய பிசிசிஐ!

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடர் முடியும் முன்பே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்கு மூடு விழா நடத்தும் வேலையை துவங்கி இருக்கிறது பிசிசிஐ.

அவரது ஒப்பந்தம் இந்த உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்த தொடருக்கு பின் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்ற பேச்சு கிளம்பி இருக்கிறது.
அதற்கான காரணங்களையும் கசிய விட்டுள்ளது பிசிசிஐ.

BCCI official listed out Rahul Dravids decisions that gone wrong

பெரும் எதிர்பார்ப்பு : பயிற்சியாளர் ரவி சாஸ்திரி - கேப்டன் விராட் கோலி கூட்டணியின் கீழ் செயல்பட்ட இந்திய அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில் ரவி சாஸ்திரி நீக்கப்பட்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இடம் பெற்றார்.

மாறிக் கொண்டே இருந்த வீரர்கள் : முன்பு இருந்த முக்கியமான விமர்சனம், கோலி - ரவி சாஸ்திரி அணி வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது தான். அது ராகுல் டிராவிட் வந்த பின்பும் தொடர்ந்தது. இன்னும் ஒரு படி மேலே போய் கேப்டன் பதவி கூட தொடருக்கு ஒருவர் என்ற ரீதியில் கடந்த சில மாதங்களாக மாறிக் கொண்டே இருந்தது. இதற்கு வீரர்கள் காயம், ஓய்வு என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதை பயிற்சியாளராக சரியாக டிராவிட் கையாளவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

டி20 உலகக்கோப்பை முடிவு : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் இளம் வீரர்களை ஆட வைக்காமல் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலியை களமிறக்கிய டிராவிட்டின் முடிவும் தவறாக மாறியது. அந்த தொடரில் கோலி மட்டுமே ரன் குவித்தார். இந்திய அணியும் தோல்வி அடைந்து வெளியேறியது.

டெஸ்ட் இறுதிப் போட்டி முடிவு : அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறியது. அதில் டிராவிட் பங்கும் உள்ளது. ஆனால், இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை அணியில் சேர்க்காமல் விட்டது விமர்சனத்தை கிளப்பியது. அந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

கே எல் ராகுல் அழைப்பு : அடுத்ததாக தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயத்தில் இருந்து முழுமையாக மீளாத கே எல் ராகுலை அணியில் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வியும் உள்ளது. அவரை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வைக்கவே இந்த அவசர முடிவு என்றாலும் அவர் காயம் குணமடைந்து விட்டதா? என்பதே தெரியாமல் எப்படி அவரை வைத்து அணித் தேர்வை முடிவு செய்யலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

வலது கை சுழற் பந்துவீச்சாளர் எங்கே? : மேலும், சமீபத்தில் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வலது கை சுழற் பந்துவீச்சாளர் யாருமே இடம் பெறவில்லை என்பதையும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

வரிசை கட்டும் புகார்கள் : இப்படி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த அத்தனை தவறுகளையும் தற்போது பட்டியலிட்டு இருக்கும் பிசிசிஐ அதிகாரிகள் அவரை கட்டம் கட்ட தயார் ஆகி வருவதாக தெரிகிறது.

Story first published: Thursday, September 7, 2023, 13:35 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+