“அவரிடம் யாருமே பேச மாட்டார்களே”.. சேத்தன் சர்மா விவகாரம்.. பிசிசிஐ அதிகாரி அந்தர் பல்டி பேச்சு!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நடக்கும் ரகசியங்களை வெளிப்படையாக போட்டு உடைத்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் விநோதமான கருத்தை கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா என பிரபல வீரர்களின் பெயர்கள் தான் எப்போதுமே பேசுப்பொருளாக இருக்கும். ஆனால் நேற்று ஒரு தேர்வுக்குழு தலைவர் பெயர் பெரும் தீயாய் கிளம்பியுள்ளது.
தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் விராட் கோலி, சவுரவ் கங்குலி இடையே நடந்த பிரச்சினைகள், வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொள்கிறார்கள் என பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

சேத்தன் சர்மா சர்ச்சை
அவர் கூறிய ஒவ்வொரு தகவலும் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை உலுக்கியுள்ளது. குறிப்பாக விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க அவர் மீது இருந்த வெறுப்பு தான் காரணம், கங்குலி உள்ளிட்ட பல அதிகாரிகள் அவருக்கு எதிராக நடந்துக்கொண்டனர். இதற்காக கோலியின் மோசமான ஃபார்மை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டோம் எனக் கூறியிருந்தார்.

பிசிசிஐ அதிகாரி தகவல்
இந்நிலையில் சேத்தன் சர்மாவின் கருத்துகளுக்கு பிசிசிஐ-க்குள் என்ன தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சேத்தன் சர்மா கொஞ்சம் ஓவராகவே பேசிவிட்டார். இந்திய அணியில் உள்ள டாப் வீரர்கள் யாருமே அவரிடம் பேசிக்கொண்டதில்லை. ரோகித், விராட் கோலி, ராகுல் டிராவிட் போன்றவர்களிடம் சேத்தன் பேசியதை எங்கேயாவது பார்த்தது உண்டா?, பயிற்சி நேரங்களில் கூட பார்த்திருக்க முடியாது.

கவலை இல்லை
டி20 உலகக்கோப்பையின் போது ஒரு மூலையில் நின்றுக்கொண்டு போட்டிகளை கவனித்து வந்தார். அவரிடம் பேச வேண்டும் என யாருமே நினைக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை. இப்படி இருக்கையில் அவர் பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்பது போல பிசிசிஐ-ன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் ஒரு தேர்வுக்குழு தலைவருக்கு இதுக்கூடவா தெரியாமல் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

நம்பிக்கையே இல்லை
தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற ஸ்டிங் ஆப்ரேஷன்களுக்கு பிறகு எந்தவொரு பத்திரிகையாளர்களிடமும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தேர்வுக்குழு அதிகாரிகள் பேசுவதற்கு தயங்குவார்கள். யாரையும் நம்பி எதையுமே கூறக்கூடாது என்ற நம்பிக்கை இல்லாத தன்மை இனி வந்துவிடும் என அதிருப்தியுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications