“மீண்டும் அதே பிரச்சினையா??”.. விராட் கோலியின் சர்ச்சை கருத்து.. பிசிசிஐ அதிகாரி கடும் விளாசல்!
மும்பை: தோனியுடனான நட்பு குறித்து விராட் கோலி கூறிய விஷயங்களால் பிசிசிஐ-க்குள் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
Recommended Video
ஃபார்ம் அவுட்டில் இருந்த விராட் கோலி, ஆசிய கோப்பை தொடரில் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் 154 ரன்களை விளாசியுள்ளார். இதில் 2 அரைசதங்களும் அடங்கும்.

விராட் கோலி பேச்சு
தனது கம்பேக் குறித்து செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி சர்ச்சை கருத்தை கூறினார். அதில், " நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, எனக்கு ஆறுதல் கூறுவதற்கு தோனி மட்டுமே என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். பல பேரிடம் எனது செல்போன் எண் உள்ளது. ஆனால் யாருமே எனக்காக நிற்கவில்லை.

பிசிசிஐ அதிகாரி விளாசல்
இந்நிலையில் விராட் கோலியின் இந்த பேச்சுக்கு பிசிசிஐ அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர், விராட் கோலிக்காக அனைவருமே துணை நின்றனர். சக வீரர்கள் முதல் பிசிசிஐ அதிகாரிகள் வரை அவருக்காக ஆதரவு கொடுத்தோம். ஆனால் தனக்கு யாருமே ஆதரவு தரவில்லை எனக் கூறுவது தவறு. இது பொய்யான கருத்தாகும்.

வேண்டியவற்றை கொடுத்தோம்
விராட் கோலிக்கு தொடர்ச்சியாக ஓய்வு கொடுக்கப்பட்டது, தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அவர் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகிய போது சமூக வலைதளங்களில் கூட கோலிக்கு பலரும் வாழ்த்துக்குறி வந்தனர். அவர் தற்போது இப்படி ஏன் பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை எனக் கூறியுள்ளார்.

பழைய பிரச்சினை
இதற்கு முன்னதாக விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, பிசிசிஐ சார்பில் வேண்டாம் என மறுத்தோம் என கங்குலி கூறியிருந்தார். ஆனால் அப்படி யாருமே தன்னிடம் கூறவில்லை என விராட் கோலி மறுத்திருந்தார். பெரும் சர்ச்சையான இந்த கருத்துக்கு தற்போது வரை முடிவு எட்டப்படவில்லை.


Click it and Unblock the Notifications