Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டை வணிகமாக மட்டுமே பார்க்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்: ஒலிம்பிக் கவுன்சில் குற்றச்சாட்டு

BCCI only interested in making money, says Olympic Council of Asia
இன்சியான்: கிரிக்கெட்டை வெறும் வணிகமாக மட்டுமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அணுகுகிறது என்று ஆசியாவுக்கான ஒலிம்பிக் கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.

தென்கொரியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியை கிரிக்கெட் வாரியம் அனுப்ப வில்லை.

இது குறித்து ஆசியாவுக்கான ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் ஷேக் அல்-சபா கூறியுள்ளதாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது முறையாக அனுப்பப்படவில்லை. அவர்களது முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

ஆனால், இது குறித்து கூறுவதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பிசிசிஐ, விளையாட்டை ஊக்குவிப்பதற்கு மாறாக, கிரிக்கெட்டை வெறும் வணிகமாகவே பார்க்கிறது. இதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியை ஒரு குழந்தை போல, பிசிசிஐ தங்களது நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. எந்த குழந்தையும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை பிசிசிஐ நினைவில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு ஷேக் அல்-சபா கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 4, 2014, 14:38 [IST]
Other articles published on Oct 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+