For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரெடி.. மார்ச் 19ம் தேதி போடப்பட்டுள்ள ஸ்கெட்ச்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி நடத்தும் தொடர்களை தவிர்த்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எந்தவித தொடரிலும் மோதி கொள்வதே கிடையாது.

அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக ரசிகர்களும் இரு நாட்டு போட்டிகளை காண ஏக்கத்துடன் உள்ளனர்.

 4 முனை போட்டி

4 முனை போட்டி

இந்த ஏக்கத்தை போக்குவதற்காக தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுவாரஸ்ய முடிவை எடுத்தது. அதாவது ஆண்டிற்கு ஒரு முறை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளுக்கு இடையே மட்டும் போட்டி நடைபெறும் வகையில் டி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.

தொடரின் விவரம்

தொடரின் விவரம்

இதுகுறித்து சமீபத்தில் பேசியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா, 4 அணிகளும், ஒவ்வொரு ஆண்டில் இந்த தொடரை தொகுத்து வழங்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும் ஐசிசியிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார்.

மீட்டிங் ரெடி

மீட்டிங் ரெடி

இந்நிலையில் அதற்காக இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக பேசிக் கொள்ளவுள்ளன. வரும் மார்ச் 19ம் தேதியன்று ACC எனப்படும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான ஆசியக்கோப்பை நடத்த இந்த கூட்டம் கூடுகிறது. இதற்காக பிசிசிஐ தலைவர் - செயல்தலைவர் ஜெய்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் இரு நாட்டு வாரியங்களும் ஆலோசனை நடத்தவுள்ளன.

 அறிவிப்பு வெளியானது

அறிவிப்பு வெளியானது

இதனை ரமிஸ் ராஜா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில், 4 நாட்களுக்கான போட்டி தொடர் குறித்து பிசிசிஐ-யிடம் பேசவுள்ளோம். அதில் ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்பட்டு ரசிகர்களுக்கு நற்செய்தி அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார். இதனால் அடுத்தாண்டு முதல் அந்த தொடரை எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, March 15, 2022, 17:06 [IST]
Other articles published on Mar 15, 2022
English summary
PCB Chairman Ramiz Raja confirmed that he will talk with BCCI President Ganguly in ACC meeting about the launching of 4 nation ODI tournament
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+