Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு திரும்புகிறார் தோனி.. தடை போடுகிறாரா டிராவிட்? ஸ்பெஷல் ஏற்பாடு செய்யும் பிசிசிஐ

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருகாக பிசிசிஐ ஒரு மாஸ்டர் பிளான் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்காவுடனும் விளையாடுகிறது.

பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் முடிவு

இதனை தவிர்த்து இரண்டு பயிற்சி ஆட்டங்கள் டி20 உலக கோப்பைக்கு முன்பு நடைபெறுகிறது. இந்த எட்டு ஆட்டங்களை வைத்து தான் இந்திய அணி தங்கள் அணியில் நிலவும் குறைகளை சரி செய்ய வேண்டும். இன்று காலை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை தொடருகாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹைடனை மென்டராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் பிசிசிஐ இதுவரை என்ன செய்கிறது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

தோனிக்கு பொறுப்பு

தோனிக்கு பொறுப்பு

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மென்டராக மீண்டும் நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு தோனி மெண்டராக பணிபுரிந்தார். ஆனால் இந்திய அணியால் எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை. இதனை தொடர்ந்து கேப்டன் மாற்றம், பயிற்சியாளர் மாற்றம் என பல்வேறு மாற்றங்களை இந்திய அணி சந்தித்தது.

விரும்பாத டிராவிட்

விரும்பாத டிராவிட்

இதன் விளைவாக பல்வேறு டி20 தொடர்களையும் இந்திய அணி வென்றது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோற்றது .இதனால் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு உதவும் விதமாக தோனியை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதற்கு பயிற்சியாளர் டிராவிட் ஒப்புதல் வழங்கவில்லை என தெரிகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணியை வழிநடத்தினார்.

தோனி வருவாரா?

தோனி வருவாரா?

ஆனால் மூன்று நாட்களுக்குள்ளே துபாய் வந்தடைந்த டிராவிட் அணியை தாம் பார்த்துக் கொள்வதாக கூறினார். இதனால் தமது இடத்திற்கு மற்றொரு வீரர் வருவது டிராவிட்டுக்கு விருப்பமில்லை என தெரிகிறது. இந்திய அணி தொடர்ந்து நாக்அவுட் போட்டிகளில் சொதப்பி வருகிறது. இதனால் இந்திய அணி அறையில் தோனி போன்ற ஒரு வீரர் இருந்தால் அது இந்திய அணிக்கு நன்மையை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Friday, September 9, 2022, 20:54 [IST]
Other articles published on Sep 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+