Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமிக்கு வந்த அதே நிலை.. இனி டி20 கிரிக்கெட்டில் 4 சீனியர் வீரர்கள் இல்லை.. பிசிசிஐ முக்கிய முடிவு!

துபாய்: டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் 4 முன்னணி சீனியர் வீரர்களை ஓரம் கட்ட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Recommended Video

T20 World Cup தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக சொதப்பியது. சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை பெற்று வெளியேறியது.

எனவே ஆஃப்கானிஸ்தான் அணியுடனான கடைசி போட்டியிலாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர்.

 இந்திய அணி

இந்திய அணி

இந்நிலையில் இந்தியாவின் டி20 அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து, பிசிசிஐ முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது, இந்திய அணியில் முழுக்க முழுக்க இளம் வீரர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போதே அணியை மாற்றி அமைக்கவுள்ளனர். ஒவ்வொரு பெரிய தொடரும் முடிந்த பிறகு இந்த மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம் தான்.

காரணம் என்ன

காரணம் என்ன

கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் சீனியர் வீரர் முகமது ஷமி முற்றிலும் டி20 அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார். 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுகிறார். அதே போன்று தான் தற்போது விராட் கோலி மற்றும் ஜடேஜாவுக்கு 33 வயதாகவிட்டது. இதில் ஜடேஜாவுகு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருவதால் பெரிய பிரச்சினையாக உள்ளது.

அதிக வயதுடைய அணி

அதிக வயதுடைய அணி

நடப்பு ஆசிய கோப்பை தொடரில், 30+ வயதுடைய வீரர்களை அதிகம் வைத்து விளையாடியது இந்தியா தான். 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் 2 வயது கூடுவிடும். எனவே அந்த தொடரில் புதிய கேப்டன்களுடன், முற்றிலும் இளம் அணியை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் தான் கோலி விளையாடப்போகும் கடைசி போட்டியாக இருக்கலாம்.

5 வீரர்களுக்கு ஸ்கெட்ச்

5 வீரர்களுக்கு ஸ்கெட்ச்

இந்திய அணியை பொறுத்தவரையில் தற்போது, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா ஆகிய வீரர்கள் முற்றிலும் டி20 கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படுவார்கள். இதில் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் விவாதிக்கப்படும்.

Story first published: Thursday, September 8, 2022, 18:41 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+