Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிதாக உருவாக்கப்படும் இந்திய அணி.. நியூஸி,யை எதிர்க்க இளம் படை தயார்.. யார் யார் தெரியுமா?

அமீரகம்: நியூசிலாந்து தொடருக்காக புதிய இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ தேர்வுக்குழு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றுடனேயே வெளியேறிவிட்டது.

இதனால் தற்போது அனைவரின் கவனும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் மீது திரும்பியுள்ளது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி, அடுத்ததாக இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகளும் 2 டெஸ்ட் போட்டிகளும் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது.

 மும்முரம் காட்டும் பிசிசிஐ

மும்முரம் காட்டும் பிசிசிஐ

இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. அதாவது தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரர்கள் கடந்த 6 மாதங்களாக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து தொடர், ஐபிஎல் என தொடர்ந்து பயோபபுளில் இருந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது. ஆனால் ரோகித் சர்மா மட்டும் கேப்டன் என்ற முறையில் அணியில் இருப்பார் எனத்தெரிகிறது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

ரோகித்துடன் சேர்த்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு புதிய இந்திய அணி உருவாக்கப்படவுள்ளது. அதாவது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கலக்கிய வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட், ஆவேஷ் கான், சேட்டன் சக்காரியா, ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், தீபக் சஹார் ஆகியோர் அணியில் இடம்பெறவுள்ளனர். மேலும் யுவேந்திர சாஹல் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹர்திக்கின் நிலைமை

ஹர்திக்கின் நிலைமை

ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள போதும் அவரின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ அதிகாரிகள் கவலையில் உள்ளனர். எனவே அவரை இந்த முறை ஒதுக்கிவிட்டு, அவரின் இடத்திற்கு வெங்கடேஷ் ஐயர் முயற்சித்து பார்க்க பிசிசிஐ தேர்வுக்குழு அலோசனை நடத்தி வருகிறது. எனவே விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 9, 2021, 18:24 [IST]
Other articles published on Nov 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+