For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களை நம்ப முடியாது.. ஆஸ்திரேலியா திட்டத்தை தகர்த்த பிசிசிஐ.. பார்டர் கவாஸ்கர் தொடருக்கு ஏற்பாடு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் 40 நாட்களை உள்ள நிலையில், இந்த தொடருக்கான ஆயத்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எப்போதும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் தொடரில் இந்திய அணி செல்வது என்றால் பயிற்சி ஆட்டம் ஒன்று நடத்தப்படும். ஆனால் கடந்த முறை இந்திய அணி பயிற்சி ஆட்டம் எதிலும் பங்கேற்கவில்லை.

india vs australia border gavaskar trophy bcci

இதற்கு பயிற்சியாளராக அப்போது இருந்த ரவி சாஸ்திரி சொன்ன காரணம், பயிற்சி போட்டிகளுக்கான ஆடுகளம் மிகவும் சாதாரணமாக இருக்கும். இந்திய ஆடுகளங்கள் போல் பயிற்சி ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவில் உள்ள மொக்கை வீரர்கள் எல்லாம் அந்த தொடரில் விளையாடுவார்கள்.

இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்கு பதில் நாங்கள் பயிற்சியில் கவனம் செலுத்தி எங்களை நாங்கள் மெருகேற்றிக் கொள்வோம் என்று கூறினார். எனினும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் பயிற்சி போட்டி நிச்சயம் முக்கியம் என்றாலும் அதற்கு தேவையான ஆடுகளத்தையும் வீரர்களையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதனால் கடுப்பான பிசிசிஐ, இனி உங்களை நம்பத் தேவையில்லை. பயிற்சி ஆட்டத்திற்கு நாங்களே எங்களது வீரர்களை அழைத்து வருகிறோம் என்று பிசிசிஐ கூறி இருக்கிறது. இதன்படி ருதுராஜ் தலைமையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என போராடும் வீரர்களை வைத்து ஒரு அணியை தயாரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தியா ஏ என பெயரிடப்பட்டு, அந்த அணிக்கும் இந்திய அணிக்கும் நான்கு நாள் நடைபெறும் பயிற்சி போட்டியை ஏற்பாடு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இளம் வீரர்களுக்கு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல், இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை ஆஸ்திரேலியாவில் வைத்து அவர்களை தேவைப்படும் போது அணியில் சேர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. முதல் போட்டி முடிவடைந்த பிறகு அடுத்து இரண்டு போட்டிகள் ஆஸ்திரேலிய உள்ளூர் அணிகளை வைத்து இந்திய அணியை விளையாட வைக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Sunday, October 13, 2024, 20:59 [IST]
Other articles published on Oct 13, 2024
English summary
BCCI Planning to send India a team to australia for practice match with seniors team உங்களை நம்ப முடியாது.. ஆஸ்திரேலியா திட்டத்தை தகர்த்த பிசிசிஐ.. பார்டர் கவாஸ்கர் தொடருக்கு ஏற்பாடு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+