For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா -இங்கிலாந்து டி20 தொடர்ல 50 % ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் வரும் 5ம் தேதி துவங்கி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளன.

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது டி20 தொடரில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இறுதி முடிவு அரசின் கைகளில் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டெஸ்ட் தொடர் 5ம் தேதி துவக்கம்

டெஸ்ட் தொடர் 5ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வரும் 5ம் தேதி துவங்கி சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் தொடர்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

தமிழக அரசு மறுப்பு

தமிழக அரசு மறுப்பு

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில அரசுகளிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் சுகாதாரத்துறையிடம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழக அரசு மைதானத்தில் ரசிகர்களை அனுமதிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ரசிகர்களை அனுமதிக்க ஆலோசனை

ரசிகர்களை அனுமதிக்க ஆலோசனை

இந்நிலையில் தற்போது டி20 தொடரில் 50 சதவிகித ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது குறித்து பிசிசிஐ திட்டமிட்டு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. ஆனால் இது குறித்து இறுதி முடிவு அரசின் கைகளில் உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களை அனுமதிக்க தயக்கம்

ரசிகர்களை அனுமதிக்க தயக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சாராருக்கு தற்போது கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு வரும் நிலையில் நிலைமை முழு கட்டுப்பாட்டிற்கு இன்னமும் வரவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் மைதானத்தில் ரசிகர்களை அனுமதிப்பதில் ரிஸ்க் எடுக்க மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன.

Story first published: Monday, January 25, 2021, 11:35 [IST]
Other articles published on Jan 25, 2021
English summary
We are planning to allow 50% of fans in the Stadium in T20 series -BCCI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+